குன்னங்கேரில் குருவிள ஜேக்கப்
குன்னங்கேரில் குருவிள ஜேக்கப் (Kunnenkeril Kuruvila Jacob) என்பவர் (1904-1991) கேரளத்தைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார்.[1] இவர் 1904 ஆகத்து 3 அன்று கோட்டையம் மாவட்டத்தில் அய்மனம் என்னும் சிற்றூரில் பிறந்தவர், கோட்டையம், திருவனந்தபுரம், நாகர்கோயில், பாரூர் போன்ற இடங்களில் கல்வி பயின்றார். இவர் தன் உயர்கல்வியை இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[2] இவர் சென்னையில் எம். சி. சி. மேல்நிலைப் பள்ளியின் முதல் இந்தியத் தலைமையாசிரியராக 1931-ஆம் ஆண்டில் தனது 27 வயதில் பொறுப்பேற்று, 1962இல் ஓய்வுபெறும் வரை பணியாற்றினார்.[3][4] ஓய்வுபெற்ற பிறகு, ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத் பொதுப் பள்ளியில் ஏழு ஆண்டுகளும், பின்னர் மகாராட்டிரத்தில் மும்பையில் உள்ள கதீட்ரல் அண்டு ஜான் கேனன் பள்ளியின் முதல்வராகவும் பணியாற்றினார். இவர் 1991 ஆகத்து 25 அன்று இறந்தார்.[5] இவர் முதல்வராகப் பொறுப்பேற்ற காலத்தில் இவர் பணிபுரிந்த பள்ளிகள் அனைத்தும் பின்தங்கிய நிலையிலே இருந்தன. பின்னர் தன்னுடைய தொலைநோக்குப் பார்வையாலும் சமூக அக்கறையாலும் அவற்றை முன்மாதிரிப் பள்ளிகளாக வளர்த்தெடுத்தார்.[6] இவரது பணிகளைப் பாராட்டும் விதமாக இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருது 1991 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[7] ஜேக்கப்பின் முன்னாள் மாணவர்கள் அவரை நினைவுகூரும் வகையில் பள்ளிக் கல்வியை ஆகச்சிறந்த முறையில் மேம்படுத்தும் முனைப்போடு இவரது பெயரில் குருவிள ஜேக்கப் முயற்சிகள் (Kuruvila Jacob Initiative) என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
குன்னங்கேரில் குருவிள ஜேக்கப் | |
---|---|
பிறப்பு | Aymanam |
மேற்கோள்கள்
தொகு- ↑ Muthaiah S. (2011). Madras Miscellany. Westland. p. 1212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789380032849. Archived from the original on 2016-03-23. பார்க்கப்பட்ட நாள் 2018-08-15.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|author=
and|last=
specified (help) - ↑ "மனிதன்". குருவிள ஜேக்கப். 2014. Archived from the original on 2 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help) - ↑ "எம். சி. சி". குருவிள ஜேக்கப். 2014. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help) - ↑ "IITM". IITM. 2014. Archived from the original on 28 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help) - ↑ "பிற்கால வருடங்கள்". குருவிள ஜேக்கப். 2014. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help) - ↑ ம.சுசித்ரா (14 ஆகத்து 2018). "ஆசிரியர்க்கெல்லாம் தலைமகன்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2018.
- ↑ "Padma Awards" (PDF). பத்மா விருதுகள். 2014. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2014.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)