குன்வர் திர்

குன்வர் திர் சிங் (Kunwar Dhir Singh) ஒரு உஜ்ஜெனிய பர்மர் குலத்தைச் சேர்ந்த இராஜபுத்ர தலைவரும், 17 ஆம் நூற்றாண்டில் பீகாரில் முகலாயபேரரசிற்கு எதிராக போராடிய கிளர்ச்சியாளரும் ஆவார். இவர் போஜ்பூர் மாவட்டத்திலுள்ள பிரு பர்கானாவைச் சேர்ந்த பிக்ரம் ஷாஹியின் மகனாவார். [1]

முகலாயர்களுக்கு எதிரான கிளர்ச்சி

தொகு

இவர் ருத்ர சிங் என்று அழைக்கப்படும் அண்டை நாட்டுத் தலைவருடன் சேர்ந்து கொண்டு தனது அண்டைப் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டார். மேலும் அவர்களின் தெகாரி மற்றும் போஜ்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலமுறை முற்றுகைகளை நடத்தினார். இவர்களின் பலத்தை உணர்ந்த பீகாரின் சுபேதார், சஃபி கான், இவர்களது கூட்டணியை உடைக்க நினைத்தார். இவர் ருத்ரா சிங்கை அணுகி, தனது கிளர்ச்சிக்காக மன்னிப்புக் கேட்டு முகலாய அதிகாரிகளுக்கு கணிசமான தொகையை செலுத்தும் வரை அவர் முன்பு வைத்திருந்த பதவி மற்றும் பட்டம் மீட்டமைக்கப்படும் என்று உறுதியளித்தார். இதற்கு ஒப்புக்கொண்ட ருத்ர சிங் குன்வர் திருக்கு துரோகம் செய்தார். பிந்தையவர் தலைமறைவாகிவிட்டார்.[2]

குன்வர் திர் மற்றும் இவரது படைகள் இறுதியில் 1682 இல் மீண்டும் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் சில கிராமங்களைக் கைப்பற்றினர். ருத்ர சிங் முகலாயர்களுக்காக இழந்த பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றுமாறு சுபேதாரால் கட்டளையிடப்பட்டார். மேலும் அவர் பலமான படையுடன் சம்பாரணுக்கு அணிவகுத்து குன்வரை தோற்கடித்தார். இருப்பினும், குன்வர் திர் 1683 இல் மீண்டும் ருத்ர சிங் மற்றும் அகிதத் கான் ஆகியோரின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தார். [3] இந்த வெற்றியால் உற்சாகமடைந்த குன்வர் திர், பௌஜ்தார் அகிதாத் கான் கட்டுப்பாட்டில் இருந்த அர்ராவைத் தாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதை அறிந்த முகலாயர்கள், அகிதத் கானுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய ஒரு படை அனுப்பினர். இதை உணர்ந்த குன்வர் திர் கோரக்பூருக்கு தப்பி ஓடி பர்ஹாஜில் ஒரு புதிய கோட்டையை நிறுவினார். 1685 இல் மீண்டும் ஏகாதிபத்திய பிரதேசங்களில் கொள்ளையடிக்கத் தொடங்கினார்.

இறப்பு

தொகு

குன்வர் திர் இறுதியில் 1712 இல் இறந்தார், ஆனால் அவரது மகன் சுதிஸ்ட் நாராயண் தனது கிளர்ச்சியைத் தொடர்ந்தார்.[3][4]

சான்றுகள்

தொகு
  1. Tahir Hussain Ansari (20 June 2019). Mughal Administration and the Zamindars of Bihar. Taylor & Francis. pp. 85–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-00-065152-2.
  2. Surendra Gopal (22 December 2017). Mapping Bihar: From Medieval to Modern Times. Taylor & Francis. pp. 313–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-351-03416-6.
  3. 3.0 3.1 Tahir Hussain Ansari (20 June 2019). Mughal Administration and the Zamindars of Bihar. Taylor & Francis. pp. 85–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-00-065152-2.
  4. Qeyamuddin Ahmad (1959). "A Historical Account of Chotanagpur in the 18th Century by Raja Shitab Rai". Proceedings of the Indian History Congress 22: 378–389. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்வர்_திர்&oldid=3799792" இலிருந்து மீள்விக்கப்பட்டது