குன்வர் பாய் யாதவ்
குன்வர் பாய் யாதவ் (Kunwar Bai Yadav)(இறப்பு 23 பிப்ரவரி 2018, வயது 106)[1] சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தம்தாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்த 100 வயது கடந்த பெண் ஆவார். ஸ்வச் பாரத் அபியான் (தூய்மை இந்தியா இயக்கம்) உத்வேகத்துடன், இவரது வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்டும் பணத்தை சேர்க்க, தனது ஏழு வெள்ளாடுகளை விற்றார். 2016ஆம் ஆண்டு மாநிலத்தில் முதல் திறந்த வெளி கழிப்பறை இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால் குன்வர் பாய், பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் தூதுவராக அறிவிக்கப்பட்டார்.[2][3]
குன்வர் பாய் யாதவ் Kunwar Bai Yadav | |
---|---|
இறப்பு | (அகவை 106) ராய்ப்பூர், சத்தீசுகர், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | சமூகசெயல்பாட்டாளர் |
அறியப்படுவது | தூய்மை பாரதம் |
வாழ்க்கை
தொகுகுன்வர் பாய் யாதவ் சத்தீசுகர் மாநிலத்தின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள கோட்டோபார்ரி என்ற கிராமத்தை சார்ந்தவர். இவரின் வயது 106 ஆகும்.
இவர் வசித்து வந்த கிராமங்களில் எப்பொழுதும் காடுகளைத் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாள் நிறைவையொட்டி 2019ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி உள்ளூர் பள்ளியில், தூய்மை இந்தியா இயக்கத்தின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஒரு கழிப்பறை திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சியில் முதல் முறையாக கழிப்பறைகளைப் பற்றி இவர் கேள்விப்பட்டார். இவர் தனது சொத்துகளாக வைத்திருந்த 24 வெள்ளாடுகளில் ஏழு ஆடுகளை விற்று, தினக்கூலிப் பணியாளராகப் பணியாற்றிய தனது மருமகளின் உதவியுடன், 22,000 ரூபாய் தொகையைச் சேர்த்து தனது குடும்பத்திற்காக கழிப்பறை ஒன்றைக் கட்டினார்.[2][4] இக்கிராமத்திலுள்ள மற்றவர்கள் இவர் செய்த செயலைப் பின்பற்றி தங்கள் வீடுகளிலும் கழிப்பறையைக் கட்டினர். 2016ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த மாவட்டமானது அதிகாரப்பூர்வமாக திறந்தவெளி கழிவறை பயன்பாடற்ற கிராமமாக மாறியது. இவ்வாறான முன்மாதிரி கிராமங்களில் மாநிலத்தின் முதல் மாவட்டமாக இருந்தது.
பிரதமர் நரேந்திர மோதி கொட்டாபரிக்கு வருகைதந்த போது யாதவ் கால்களை வணங்கி மரியாதை செலுத்தினார்.[2][5][6] தூய்மையான இந்தியா பிரச்சாரத்தின் தூதுவராக அறிவிக்கப்பட்டார்.[2][7][8]
இறப்பு
தொகுகுன்வர் பாய் யாதவ் உடல்நலக்குறைவால் ராய்ப்பூரில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு சிசிச்சைப் பலனின்றி முதுமை காரணமாக 23 பிப்ரவரி 2018 அன்று தனது 106 வயதில் இறந்தார்.[1][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Kunwar Bai, the 106-year-old icon for Swachh Bharat campaign, dies". The Economic Times. 23 February 2018. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/kunwar-bai-the-106-year-old-icon-for-swachh-bharat-campaign-dies/articleshow/63048609.cms. பார்த்த நாள்: 24 February 2018.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Geeta Pandey (2016-11-01). "How a 105-year-old ended open defecation in her village". BBC News. https://www.bbc.co.uk/news/world-asia-india-37799425.
- ↑ "PM Modi lauds 104-year-old woman who sold her goats to build toilet". Daily News and Analysis. 2016-02-21. http://www.dnaindia.com/india/report-pm-lauds-104-year-old-woman-who-sold-her-goats-to-build-toilet-2180497. பார்த்த நாள்: 2016-12-11. According to this newspaper, she built two toilets.
- ↑ Meghan Werft (2016-11-01). "Indian Woman, 105, Sold 7 Goats to Build a Toilet, Sparks Massive Change". Global Citizen. பார்க்கப்பட்ட நாள் 2016-12-11.
- ↑ "PM Modi lauds 104-year-old woman who sold her goats to build toilet". Daily News and Analysis. 2016-02-21. http://www.dnaindia.com/india/report-pm-lauds-104-year-old-woman-who-sold-her-goats-to-build-toilet-2180497. பார்த்த நாள்: 2016-12-11. According to this newspaper, she built two toilets.
- ↑ "PM Modi lauds 104-yr-old woman who sold her goats to build toilet, touches her feet". Indian Express. Press Trust of India. 2016-02-21. http://indianexpress.com/article/india/india-news-india/pm-modi-touches-feet-of-104-yr-old-woman-who-sold-her-goats-to-build-toilets/. பார்த்த நாள்: 2016-12-11.
- ↑ "105-year-old Kunwar Bai made 'Swachh Bharat Abhiyan' mascot". Daily News and Analysis. 2016-09-14. http://www.dnaindia.com/india/report-105-year-old-kunwar-bai-made-swachh-bharat-abhiyan-mascot-2254942.
- ↑ Shreya Biswas (2016-09-14). "105-yr-old made Swachh Bharat Abhiyan mascot after she sells off her goats to built toilet". http://indiatoday.intoday.in/story/swachh-bharat-abhiyan-mascot-105-yr-old-woman-chhattisgarh/1/763811.html. பார்த்த நாள்: 2016-12-11.
- ↑ "Swachh Mascot 106-year-old Kunwar Bai Who Sold Her Goats to Build Toilet Dies". news18.com. 23 February 2018. http://www.news18.com/news/india/swachh-mascot-106-year-old-kunwar-bai-who-sold-her-goats-to-build-toilet-dies-1670063.html. பார்த்த நாள்: 24 February 2018.