குப்ஜா ஆறு
குப்ஜா ஆறு (Kubja River) என்பது மேற்கு இந்தியாவில் கருநாடக மாநிலம் குந்தாபுரா மற்றும் குங்குல்லி வழியாகப் பாயும் ஒரு ஆறாகும். இது சௌபர்னிகா நதி, வாராகி ஆறு, சக்ரா ஆறு மற்றும் கேதகா ஆற்றுடன் கலந்து அரபிக்கடலில் கலக்கிறது.[1] குப்ஜா, சௌபர்னிகா, வாராகி, சக்ரா மற்றும் கேதகா ஆறு ஆகிய இந்த நதி அமைப்பு, அண்டை பகுதிகளில் பாசனத்திற்கான கணிசமான பயன்பாட்டினைக் கொண்டுள்ளது. இந்த ஆறு புனிதமாக கருதப்படுகிறது. பக்தர்கள் ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களில் புனித நீராடி, பிரார்த்தனை செய்து வருகின்றனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kubja River in Kundapur, Karnataka". www.bangaloreorbit.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.
- ↑ "Kubja River - One of the Major River of Karnataka". www.discoveredindia.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.