குமாரகோவில்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

குமாரகோவில் (Kumarakovil) என்பது கன்னியாகுரி மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர். கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 34 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுர வானூர்திநிலையத்திலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் இந்தச் சிற்றூர் அமைந்துள்ளது. இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் தக்கலை பேருந்துநிலையம் உள்ளது. இங்கிருந்து குமாரகோவிலுக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு நூருல் இசுலாம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.[1]

குமாரகோவில்
சிற்றூர்
குமாரகோவில் is located in தமிழ் நாடு
குமாரகோவில்
குமாரகோவில்
ஆள்கூறுகள்: 8°14′37″N 77°20′58″E / 8.2437°N 77.3495°E / 8.2437; 77.3495[1]
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்85.06 m (279.07 ft)
மொழிகள்
 • அலுவல்முறைதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்629180
வாகனப் பதிவுTN-74
அருகிலுள்ள நகரம்தக்கலை

இங்குள்ள வேளிமலை முருகன் கோவில் மிகவும் புகழ்பெற்றது.[2] இங்குள்ள 200 அடி உயரமுள்ள வேளிமலை என்ற குன்றில் வேளிமலை குமாரசாமி கோவில்[3] குடவரைக் கோவிலாகக் கட்டப்பட்டுள்ளது. முருகரும் வள்ளியும் முதன்மைத் தெய்வங்களாக உள்ளனர்; இங்குதான் இவர்கள் திருமணம் நிகழ்ந்ததாக நம்பப்படுகின்றது. கேரளாவிலிருந்து இங்கு பெரும்பாலான பக்தர்கள் வருகின்றனர். கோவிலின் விழாக்களுக்கு கேரளக் காவல்துறையின் இசைக்குழு பங்கேற்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Noorul Islam Centre for Higher Education". Noorul Islam Centre for Higher Education (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-23.
  2. "குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு 108 பால்குடம் எடுத்து செல்ல ஊர் காவடி கூட்டத்தில் தீர்மானம்". dhinamurasu.in. பார்க்கப்பட்ட நாள் 2023-10-23.
  3. மாலை மலர் (2022-03-29). "குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் ஆராட்டு நிகழ்ச்சி". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-23.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரகோவில்&oldid=3814428" இலிருந்து மீள்விக்கப்பட்டது