குமி நாயுடு

மனித உரிமைகள் ஆர்வலர்

குமி நாயுடு (Kumi Naidoo) (பிறப்பு 1965, டர்பன், தென்னாப்பிரிக்கா) ஓர் தென்னாப்பிரிக்க மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.

குமி நாயுடு
மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் நாயுடு, 2019
பிறப்பு1965
டர்பன், தென்னாப்பிரிக்கா
தேசியம்தென்னாப்பிரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
பணிமனித உரிமை ஆர்வலர்
அமைப்பு(கள்)பன்னாட்டு மன்னிப்பு அவை
பட்டம்பன்னாட்டு மன்னிப்பு அவையின் பொதுச் செயலாளர். (2018 முதல் 2020 வரை)

குமி நாயுடு, சர்வதேச அரசு சார்பற்ற தன்னார்வ சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமூக சேவை அமைப்பான கிரீன்பீஸ் என்ற சர்வதேச அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் (2009 முதல் 2016 வரை) பன்னாட்டு மன்னிப்பு அவையின் பொதுச்செயலாளராகவும் (2018 முதல் 2020 வரை) இருந்தார். 2020இன்படி , நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றுக்காக குரல் கொடுக்கும் ஆப்பிரிக்கர்களின் முதல் உலகளாவிய தூதர் ஆவார். [1] அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் தண்டர்பேர்ட் உலகளாவிய மேலாண்மைப் பள்ளியில் பயிற்சி பேராசிரியராகவும், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் வருகை தரும் சக ஊழியராகவும், மாக்டலென் கல்லூரியில் கௌரவ சக ஊழியராகவும் பணியாற்றுகிறார்.

1970 மற்றும் 1980களில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்துப் போராடும் குழந்தை ஆர்வலராக நாயுடு தனது சமூகப் பணிகளைத் தொடங்கினார். இவர், தென்னாப்பிரிக்க தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் இணைந்து பணிபுரியும் ஒரு பொதுநல அமைப்பான "ஹெல்ப்பிங் ஹேன்ட்ஸ்" (உதவும் கரங்கள்) என்ற அமைப்பின் இணை நிறுவனராகவும் இருக்கிறார். பன்னாட்டு மன்னிப்பு அவையின் ஒன்பதாவது பொதுச்செயலாளர் உட்பட பல்வேறு அமைப்புகளில் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் உலகளாவிய பிரச்சாரங்களுக்கு நாயுடு தலைமை தாங்கினார்.[2] உடல்நலம் காரணமாக தனது பதவியிலிருந்து விலகுவதற்கான முடிவை 2019இல் எடுத்தார் . [3]

2011 இல் நடந்த உலக பொருளாதார மன்ற வருடாந்திர கூட்டத்தில் குமி நாயுடு

மரியாதையும் விருதுகளும்

தொகு

குமி நாயுடுவுக்கு கீழ்க்கண்ட நிறுவனங்களால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது:

2019இல் ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகம்[4]

2017இல் டர்பன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்[5]

2012 இல் நெல்சன் மண்டேலா பல்கலைக்கழகம் [6]

2014 இல் அமைதியான செயல்பாட்டிற்கான ஜேம்ஸ் லாசன் விருது[7]

தென்னாப்பிரிக்காவின் 21 குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவராக குமி தேர்ந்தெடுக்கப்பட்டார்: நெல்சன் மண்டேலாவின் பாரம்பரியத்தை மதித்தல் (2013)[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "AfricansRising" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2020-06-07. பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
  2. "New Secretary General Kumi Naidoo pledges support for African human rights defenders to hold the powerful to account". amnesty.org. August 2018.
  3. "Amnesty International's Secretary General steps down". amnesty.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  4. "News & Events - Honorary doctoral degree for activist Kumi Naidoo". uj.ac.za (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
  5. "DUT HONORARY DOCTORATE FOR Dr Kumi Naidoo". Durban University of Technology (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-09-07. பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
  6. https://alumni.mandela.ac.za/Honorary-Doctorates
  7. "https://twitter.com/kuminaidoo/status/479908688812331009". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-03. {{cite web}}: External link in |title= (help)
  8. '21 Icons' Video Profile of Kumi Naidoo (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2020-06-03

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமி_நாயுடு&oldid=3537392" இலிருந்து மீள்விக்கப்பட்டது