குமுதாவதி ஆறு

குமுதாவதி ஆறு (Kumudavathi river) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு நகரின் வடமேற்கே பாயும் ஒரு சிறிய ஆறு ஆகும். பெரும்பாலும் வறண்டே கிடக்கும் இந்த ஆற்றை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குமுதாவதி ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூர் ஊரக மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
மூலம்கும்ப தீர்த்தம், சிவகங்கை மலை
 ⁃ அமைவுபெங்களூர் ஊரக மாவட்டம், கருநாடகம், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்13°10′11″N 77°13′23″E / 13.169693°N 77.222919°E / 13.169693; 77.222919
முகத்துவாரம்ஆர்க்காவதி ஆறு
 ⁃ அமைவு
திப்பகொண்டனஹள்ளி, பெங்களூர் ஊரக மாவட்டம், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்
12°58′30″N 77°20′05″E / 12.974991°N 77.334829°E / 12.974991; 77.334829
நீளம்45 km (28 mi)approx.

ஆறு தொடங்குமிடம்

தொகு

இந்த நதி சிவகங்கை மலையில் உள்ள கும்ப தீர்த்தத்தில் உற்பத்தியாகி 45 கி.மீ தொலைவிற்கு பாய்கிறது திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்தில் அர்காவதி ஆற்றுடன் சங்கமிப்பதற்கு முன்பு கி.மீ. ஆற்றுப்படுகை 460 சதுர கி.முிட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. இதன் முழு நீர்ப்பிடிப்பு பகுதி 278 கிராமங்களை உள்ளடக்கியது. [1]

வறட்சி மற்றும் மீட்டெடுப்பு முயற்சிகள்

தொகு

ஆற்றில் நீர் வரத்து குறைந்தாலும், 2007ல் குமுதாவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம் வறண்டு போனதால் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. பிப்ரவரி 2013 இல், வாழும் கலை அறக்கட்டளையின் (AOL) தன்னார்வத் தொண்டர்களின் ஒரு பெரிய குழு குமுதாவதி நதியை அறிவியல் முறையைப் பயன்படுத்தி புத்துயிர் அளிக்கும் புணரமைப்புத் திட்டத்தை மேற்கொண்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில், இந்த திட்டத்தால் 439 தடுப்பணைகள், 20 பாரம்பரிய படிக்கட்டுக் கிணறுகளில் படிந்திருந்த மேல் மண் அகற்றுதல், 434 நீரூற்றுக் கிணறுகள், 45 ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் 71 சிறு குட்டைகள் போன்றவை கட்டப்பட்டன. 425,000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இந்த அமைப்பு நட்டது. மேலும், ஆற்றங்கரையைச் சுற்றியுள்ள 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 75,000 க்கும் அதிகமான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kumudvathi is Gushing with Water Again". Archived from the original on 10 November 2021. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
  2. "Kumudvathi, a river on the path to recovery". பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுதாவதி_ஆறு&oldid=4097881" இலிருந்து மீள்விக்கப்பட்டது