கும்பகோணம் திரௌபதியம்மன் கோயில்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் திரௌபதியம்மன் வழிபாடு காணப்படுவதை அங்குள்ள திரௌபதியம்மன் கோயில்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம். கும்பகோணத்தில் அம்மன் கோயில் தெரு, சக்கரபாணி கோயில் கீழ வீதி, சாரங்கபாணி கீழ வீதி, மதகடித்தெரு, ஹாஜியார் தெரு ஆகிய இடங்களில் திரௌபதியம்மனுக்குக் கோயில்கள் உள்ளன.
சக்கரபாணி கோயில் கீழவீதி
தொகுசக்கரபாணி கோயில் கீழவீதியில் ஒரு திரௌபதியம்மன் கோயில் உள்ளது. [1]இக்கோயிலில் மூலவராக திரௌபதியம்மன் ஆவார். சிறிய விநாயகர் சிலையும் இக்கோயில் வளாகத்தில் உள்ளது. பேப்பரால் ஆன அரவான் தலை காணப்படுகிறது. இக்கோயிலில் 11.5.2005இல் பார்த்திப வருடம் சித்திரை மாதம் 28ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றுள்ளதற்கான கல்வெட்டு உள்ளது. அண்மையில் இக்கோயிலின் குடமுழுக்கு 1 சூலை 2018 அன்று நடைபெற்றது. [2]
சாரங்கபாணி கோயில் கீழவீதி
தொகுசக்கரபாணி கோயில் கீழவீதியில் உள்ளவாறே சாரங்கபாணி கோயில் கீழ வீதியிலும் ஒரு திரௌபதியம்மன் கோயில் உள்ளது. [1]இக்கோயிலில் மூலவராக திரௌபதியம்மன் உள்ளார். இரு காளிகள் மற்றும் மதுரை வீரன் சிலைகள் திரௌபதியம்மன் சன்னதியின் இடது புறம் உள்ளன. இக்கோயிலில் விஷு வருடம் ஆவணி 7ஆம் தேதி, 23.8.2001இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு உள்ளது. 6.4.2015 திங்கட்கிழமையன்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. [3]
மதகடித்தெரு
தொகுகும்பகோணம் மதகடித்தெருவில் திரௌபதியம்மன் கோயில் உள்ளது. [1]இங்கு திரௌபதி, விநாயகர் சிலைகள் உள்ளன. தனி சன்னதியில் அரவான் தலை காணப்படுகிறது. இக்கோயிலின் குடமுழுக்கு அக்டோபர் 26, 2015இல் நடைபெற்றது. [4] [5]
ஹாஜியர் தெரு
தொகுகும்பகோணம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹாஜியர் தெருவில் ஒரு திரௌபதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திரௌபதியம்மன், காயத்திரி காளியம்மன், மாரியம்மன் ஆகிய கடவுளர்களுக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. மிகப்பெரிய அரவான் இக்கோயிலில் உள்ளது. இக்கோயிலின் குடமுழுக்கு பிப்ரவரி 3, 2016இல் நடைபெற்றது. [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992
- ↑ 3 கோயில்களில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு, தினமணி, 2 சூலை 2018
- ↑ குடந்தை திரௌபதியம்மன் கோயில் குடமுழுக்கு, தினமணி, 7.4.2015
- ↑ கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர் கோயில்களில் குடமுழுக்கு விழா, தினமணி, அக்டோபர் 23, 2015
- ↑ கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், கும்பகோணத்தில் 14 கோயில்களில் குடமுழுக்கு, தினமணி, அக்டோபர் 27, 2015
- ↑ குடந்தையில் 3 கோயில்களில் மகாகும்பாபிஷேகம், தினமணி, பிப்ரவரி 4, 2016