கும்பேஷ்வரர் கோயில்
கும்பேஷ்வரர் கோயில் (Kumbheshwar Temple) (कुम्भेश्वर मन्दिर) நேபாளத்தின் பழைமை வாய்ந்த சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் பதான் நகரத்திலிருந்து வடக்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் நேபாள மன்னர் ஜெயஷ்தித மல்லரால் 1392-இல் கட்டப்பட்டது. இக்கோயில் ஐந்து அடுக்குகள் கொண்டது. கும்பேஷ்வரர் கோயில் மரச்சிற்பங்களுக்கு புகழ் பெற்றது. இக்கோயிலை நோக்கி பெரிய நந்தி சிலை அமைந்துள்ளது.[1][2] இக்கோயில் பௌத்த அடுக்குத் தூபி கட்டிடப் பாணியில் கட்டப்பட்டது.
கும்பேஷ்வரர் கோயில் | |
---|---|
கும்பேஷ்வரர் கோயில் | |
ஆள்கூறுகள்: | 27°40′36″N 85°19′33″E / 27.67667°N 85.32583°E |
பெயர் | |
பெயர்: | Kumbheshwar Mandir |
தேவநாகரி: | कुम्भेश्वर मन्दिर |
அமைவிடம் | |
நாடு: | Nepal |
மாநிலம்: | பாக்மதி மண்டலம் |
மாவட்டம்: | லலித்பூர் மாவட்டம் |
அமைவு: | காத்மாண்டு |
கோயில் தகவல்கள் | |
சிறப்பு திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி முதலியன |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | அடுக்குத் தூபி |
கோயில்களின் எண்ணிக்கை: | 3 |
நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை: | 5 |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1392 |
அமைத்தவர்: | மன்னர் ஜெயஷ்திதி மல்லர் |
கும்பேஷ்வரர் கோயில் வளாகத்தில் பகளாமுகி கோயில், உன்மத்த பைரவர் கோயில்கள் அமைந்துள்ளது.
படக்காட்சிகள்
தொகுகும்பேஷ்வரர் கோயில் வளாகத்தில் பகளாமுகி கோயில் காட்சிகள்