குரங்கு அம்மை

குரங்கு அம்மை (Monkeypox) என்பது குரங்கம்மைத் தீநுண்மியால் (வைரசால்) உண்டாகும் ஒரு தொற்றுநோய். இந்நோய் மாந்தர்களையும் சில விலங்குகளையும் தாக்குகின்றது.[2] இதற்கான நோய் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, உடலில் தசை வலி, நெறிகட்டுதல், களைப்பாக உணர்தல் போன்றவையாகும்.[1] இதனைத்தொடர்ந்து கொப்புளம், தடிப்புகள் போன்றவை தோன்றலாம்.[1] இந்நோய் தொற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் 7-14 நாள்கள் தொடர்பாக இருக்கலாம். [1] அறிகுறிகள் காணப்படும் காலம் 2-4 கிழமைகள்.[1]

குரங்கு அம்மை
நான்கு வயது சிறுமியில் உடலில் காணப்படும் தடிப்புகளும் கொப்புளங்களும்
சிறப்புதொற்றுநோய்
அறிகுறிகள்காய்ச்சல், தலைவலி, உடல் தசைவலி, கொப்புளங்கள், நெறிகட்டுதல்[1]
வழமையான தொடக்கம்5–21 நாள்கள் நோயுள்ளவர்கள் தொடர்பு [1]
கால அளவு2–4 கிழமைகள் வரை[1]
காரணங்கள்குரங்கம்மைத் தீநுண்மி[2]
நோயறிதல்தீநுண்ம டிஎன்ஏ சோதனை[3]
ஒத்த நிலைமைகள்சின்னம்மை, பெரியம்மை[4]
தடுப்புபெரியம்மைத் தடுப்பூசி[3]
மருந்துடெக்கோவிரிமாட் (Tecovirimat)
நிகழும் வீதம்அரிதாகக் காணப்படுவது[2]
இறப்புகள்3.6% வரை (மேற்கு ஆப்பிரிக்கக் கிளை தீநுண்மி),[5] up to 10.6%[5] (Congo Basin clade, untreated)[6]

விலங்குகளின் கடியாலோ, விலங்கின் கீறலாலோ, காட்டில் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியைக் கையாள்வதாலோ, நோயுற்றவரோடு நெருங்கிய தொடர்பாலோ, உடல்நீர்க்கலப்பாலோ குரங்கம்மை நோய் உண்டாகின்றது.[7] இந்த நோய்க்கான தீநுண்மி பொதுவாக எலி போன்ற கொறிணிகளிடையே சுழற்சியில் இருக்கும்.[7] நோயை அறிந்துகொள்ள நோயுற்றவர் உடலில் சிறு வெட்டின் மூலம் தீநுண்மி உள்ளதை அதன் மரபணுச் சரத்தில் இருந்து கண்டுகொள்ளலாம்.[3]

பெரியம்மைத் தடுப்பூசி இந்நோயைத் தடுக்க 85% வல்லமை கொண்டது.[3][8] 2019 ஆம் ஆண்டு சின்னியோசு (ynneos) என்னும் குரங்கம்மைத் தடுப்பூசி அமெரிக்காவில் வளர்ந்த ஆட்களுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பெற்றது.[9] தற்போது சீர்வழக்கான மருத்துவத் தீர்வு தீநுண்மி எதிர்ப்பு மருந்தாகிய தெக்கோவிரிமட்டு (tecovirimat) ஆகும். இது குறிப்பாக பெரியம்மை, குரங்கைம்மை போன்ற ஆர்த்தோபாக்சுவைரசுகளுக்கானவை (orthopoxviruses). இது ஐரோப்பிய ஒன்றியத்திலும், அமெரிக்காவிலும் குரங்கம்மைக்குத் தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்ட்ட மருத்துவ முறை. சிடோபோவிர் (Cidofovir) அல்லது பிரின்சிடோபோவிர் (brincidofovir) ஆகியவும் பயனுடையதாக இருக்கலாம்.[4] மருத்துவத் தீர்வுகள் எதையும் எடுத்துக்கொள்ளாவிட்டால் ஏற்படும் இறப்பின் வீதம் காங்கோ பகுதியிலும் நடு ஆப்பிரிக்கப் பகுதியிலும் காணப்படும் குரங்கம்மை வகையால் 10% அல்லது 11% என்று கணக்கிடப்பட்டுள்ளது.[1][10] [5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Signs and Symptoms Monkeypox". CDC (in அமெரிக்க ஆங்கிலம்). 11 May 2015. Archived from the original on 15 October 2017. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  2. 2.0 2.1 2.2 "About Monkeypox". CDC (in அமெரிக்க ஆங்கிலம்). 11 May 2015. Archived from the original on 15 October 2017. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  3. 3.0 3.1 3.2 3.3 "2003 U.S. Outbreak Monkeypox". CDC (in அமெரிக்க ஆங்கிலம்). 11 May 2015. Archived from the original on 15 October 2017. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  4. 4.0 4.1 "Human monkeypox". Clinical Infectious Diseases 58 (2): 260–267. January 2014. doi:10.1093/cid/cit703. பப்மெட்:24158414. 
  5. 5.0 5.1 5.2 "Multi-country monkeypox outbreak in non-endemic countries". உலக சுகாதார அமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 22 May 2022.
  6. Osorio, J.E.; Yuill, T.M. (2008). "Zoonoses". Encyclopedia of Virology. pp. 485–495. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/B978-012374410-4.00536-7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123744104. S2CID 214756407.
  7. 7.0 7.1 "Transmission Monkeypox". CDC (in அமெரிக்க ஆங்கிலம்). 11 May 2015. Archived from the original on 15 October 2017. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  8. "Treatment | Monkeypox | Poxvirus | CDC". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-18. Archived from the original on 2019-06-15. பார்க்கப்பட்ட நாள் 2022-05-18.
  9. "FDA approves first live, non-replicating vaccine to prevent smallpox and monkeypox". FDA (in ஆங்கிலம்). 24 September 2019. Archived from the original on 17 October 2019. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
  10. "Clonal vaccinia virus grown in cell culture fully protects monkeys from lethal monkeypox challenge". Vaccine 26 (4): 581–588. January 2008. doi:10.1016/j.vaccine.2007.10.063. பப்மெட்:18077063. 

வெளி இணைப்புகள்

தொகு
வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரங்கு_அம்மை&oldid=3679447" இலிருந்து மீள்விக்கப்பட்டது