சயன்டிஃபிக் அமெரிக்கன்

சயன்டிஃபிக் அமெரிக்கன் (Scientific American) ஐக்கிய அமெரிக்காவில் இருந்து ஆகஸ்ட் 28, 1845 இல் இருந்து வெளிவரும் ஓர் ஆங்கில மாத இதழாகும். அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் மிகப்பழைய இதழும் இதுவே. இது முதலில் வாராந்த இதழாக வெளியிடப்பட்டது தற்போது மாதாந்த இதழாக வெளிவருகிறது. அறிவியலின் பல துறைகளிலும் நிகழும் நிகழ்வுகளை மக்களின் பல மட்டங்களில் உள்ளவர்களுக்கும் ஏற்ற விதத்தில் கட்டுரைகளை இவ்விதழ் வெளியிட்டு வருகிறது.

சயன்டிஃபிக் அமெரிக்கன்
மார்ச் 2005 இதழ் முகப்பு
துறை அறிவியல்
மொழி ஆங்கிலம்
வெளியீட்டுத் தகவல்கள்
வெளியீட்டாளர் சயன்டிஃபிக் அமெரிக்கன், இன்க். (அகூநா)
வரலாறு ஆகஸ்ட் 28, 1845 - இற்றைவரை
வெளியீட்டு சுழற்சி மாத இதழ்
தரப்படுத்தல்
ISSN 0036-8733}}
இணைப்புகள்

சயன்டிஃபிக் அமெரிக்கன் இதழ் அமெரிக்காவில் மட்டும் (டிசம்பர் 2005 இல்) மாதாந்தம் கிட்டத்தட்ட 55,000 பிரதிகளும் அனைத்துலக ரீதியாக 90,000 பிரதிகளும் விற்பனையாகிறது[1].

மேற்கோள்கள்

தொகு
  1. "பிரிண்ட் மீடியா தகவல் தரவுகள்". சயன்டிஃபிக் அமெரிக்கன் டொட் கொம். பார்க்கப்பட்ட நாள் 2006-04-29.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயன்டிஃபிக்_அமெரிக்கன்&oldid=3701231" இலிருந்து மீள்விக்கப்பட்டது