குருகுமார் பாலச்சந்திர பருல்கர்
குருகுமார் பாலச்சந்திர பருல்கர் (Gurukumar Balachandra Parulkar) ஒர் இந்திய இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை மற்றும் சேத் கோர்தண்டாசு சுந்தர்தாசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். 1984 ஆம் ஆண்டு இந்திய அறுவைசிகிச்சை சங்கத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றினார் [1] கு.பா. பருல்கர் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார்.
குருகுமார் பாலச்சந்திர பருல்கர் G. B. Parulkar | |
---|---|
பிறப்பு | திசம்பர் 1, 1931 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி | இருதய அறுவை சிகிச்சை நிபுணர் |
அறியப்படுவது | இருதய அறுவை சிகிச்சை |
விருதுகள் |
|
இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரம் மும்பையில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் நாள் இவர் பிறந்தார் [2], இந்தியாவில் இருதய அறுவை சிகிச்சையின் முன்னோடியாகத் திகழ்ந்த பிரபுல்லா குமார் செனினுடன் இணைந்து பருல்கர் பணியாற்றினார் [3]. மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்திலுள்ள பேலோர் மருத்துவக் கல்லூரியில் மேம்பட்ட பயிற்சியைப் பெற்றார். இந்தியாவுக்குத் திரும்பியதும், இந்தியாவில் விரிவடைந்த பெருந்தமனி நீக்கத்திற்கான தாழ்வெப்பநிலை இரத்த ஓட்டத்தடுப்பு நுட்பத்தை அறிமுகப்படுத்தினார்[4]. 37 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்த செவிலி அருணா சான்பாக் வழக்கில் பாதிக்கப்பட்ட மருத்துவர்களில் இவரும் ஒருவராவார்[5][6].
இந்தியாவில் மருத்துவ பிரிவுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பிதான் சந்திரா ராய் விருதை இந்திய மருத்துவக் கழகம் 1997 ஆம் ஆண்டு குருகுமார் பாலச்சந்திர பருல்கருக்கு வழங்கியது[7]. 1998 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு மிக உயர்ந்த மூன்றாவது குடிமகன் விருதான பத்ம பூசண் விருதை வழங்கி சிறப்பித்தது[8]. மேலும் இவர் மகாராட்டிர சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் வழங்கும் 2009 ஆம் ஆண்டுக்கான மராத்தான் ஆசிரியர் விருது[9] மற்றும் இதுபோன்ற பல கௌரவங்களையும் பருல்கர் பெற்றார்[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Past Presidents & Secretaries – The Association of Surgeons of India". asiindia.org (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-06-06. பார்க்கப்பட்ட நாள் 2018-06-06.
- ↑ 2.0 2.1 "Tree Of Gratitude - Dr. Parulkar GurukumarBhalchandra". www.cardiacsurgeongandhi.com. 2018-06-05. பார்க்கப்பட்ட நாள் 2018-06-05.
- ↑ "Cardiovascular and Thoracic Surgery - KING EDWARD MEMORIAL HOSPITAL". www.kem.edu (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-06-05. பார்க்கப்பட்ட நாள் 2018-06-05.
- ↑ Verma, Himanshu; Rai, Kumud; Vallabhaneni, S Rao; Tripathi, Ramesh (2015-07-01). "History of Aortic Surgery in India". Indian Journal of Vascular and Endovascular Surgery (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-05.
- ↑ Pinki Virani (14 October 2000). Aruna's Story: The True account of a Rape and its Aftermath. Penguin Books Limited. pp. 19–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5118-076-0.
- ↑ "Aruna is the bond that unites us: KEM Hospital dean". dna (in அமெரிக்க ஆங்கிலம்). 2011-03-07. பார்க்கப்பட்ட நாள் 2018-06-05.
- ↑ "Cardiovascular And Thoracic Surgery". indiamart.com (in ஆங்கிலம்). 2018-06-05. பார்க்கப்பட்ட நாள் 2018-06-05.
- ↑ "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.
- ↑ Avinash Patwadhan (2009-04-06). "Dr. G. B. Parulkar awarded The Marathon Teacher Award". பார்க்கப்பட்ட நாள் 2018-06-05.