குருதாசு மாண்

குருதாசு மாண் (Gurdas Maan, பஞ்சாபி: ਗੁਰਦਾਸ ਮਾਨ ; பிறப்பு: சனவரி 4, 1957 ) இந்திய பாடகரும் பாடலாசிரியரும் நடிகருமாவார். பஞ்சாபி இசை உலகின் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக குருதாசு மாண் உள்ளார்.[1] இந்திய பாஞ்சாப் மாநிலத்தில் கிதர்பாகா என்ற சிற்றூரில் பிறந்த மாண், 1980இல் வெளியான "தில் டா மாம்லா ஹை" என்ற பாடல் மூலம் தேசிய அளவில் அறியப்பட்டார். 34க்கும் கூடுதலாக இசைத்தொகுப்புக்களைப் பதிப்பித்தும் 305 பாடல்களை எழுதியும் உள்ளார். 2013இல் தனது விசிறிகளுடன் தொடர்புடன் இருக்க தனக்கென யூடியூப் வரிசையொன்றை உருவாக்கிக் கொண்டுள்ளார்; இதில் ஒளித வலைப்பதிவுகள், பழைய மற்றும் புதிய இசை ஒளிதங்களை தரவேற்றுகின்றார்.

குருதாசு மாண்
ਗੁਰਦਾਸ ਮਾਨ
Gurdas Mann at Divya Dutta's mother Nalini's book launch
நூல் வெளியீடொன்றின்போது குருதாசு மாண்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு4 சனவரி 1957 (1957-01-04) (அகவை 67)
கிதர்பாகா, சிறீ முக்த்சர் சாகிப், பஞ்சாப், இந்தியா
இசை வடிவங்கள்நாட்டாரிசை
பங்கரா
தொழில்(கள்)பாடகர்-பாடலாசிரியர்
நடிகர்
இசைக்கலைஞர்
இசைத்துறையில்1980–நடப்பில்
இணைந்த செயற்பாடுகள்மஞ்சித் மாண் (மனைவி), அகம் சுஃபி, சுர்ஜித் பிந்த்ராகியா, மங்கி மகால், சுக்சிந்தர் சிண்டா, அப்ரார்-உல்-அக், இட்ரூ-இசுக்கூல் கே. எஸ். மக்கன், கவோசு தயாரிப்பு, ஜெய்தேவ் குமார்
இணையதளம்http://www.gurdasmaan.com, http://www.YouTube.com/குருதாஸ் மாண்

மேற்சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதாசு_மாண்&oldid=2217558" இலிருந்து மீள்விக்கப்பட்டது