முக்த்சர் சாகிப் மாவட்டம்

முக்த்சர் சாகிப் மாவட்டம் (Muktsar Sahib district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ஸ்ரீ முக்த்சர் சாகிப் ஆகும். [1]

முக்த்சர் சாகிப்
ਜ਼ਿਲ੍ਹਾ ਸ੍ਰੀ ਮੁਕਤਸਰ ਸਾਹਿਬ
மாவட்டம்
பாஞ்சாப் மாநிலத்தின் மாவட்டங்கள்
பாஞ்சாப் மாநிலத்தின் மாவட்டங்கள்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்முக்த்சர்
தலைமையிடம்முக்த்சர்
வட்டங்கள்3
பரப்பளவு
 • மொத்தம்2
ஏற்றம்184
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்901
 • அடர்த்தி348
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
 • Regionalபஞ்சாபி
 • பிறஉருது, இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்152026
தொலைபேசி குறியீட்டெண்01633
வாகனப் பதிவுPB 30
பாலின விகிதம்1000/ 896 /
எழுத்தறிவு65.81 %
இணையதளம்www.muktsar.nic.in

வரலாறுதொகு

இம்மாவட்டத்தின் தலைமையிடமான முக்த்சர் நகரத்தில் சீக்கியர்களின் பத்தாவது குருவான குருகோவிந்த சிங்கின் சீக்கிய கல்சா படைகளுக்கும், மொகலாயப் பேரரசன் அவுரங்கசீப் படைகளுக்கும் 1705-இல் பெரும் போர் நடைபெற்றது. இப்போரை முக்த்சர் போர் என வராலாற்றில் குறிபிடப்படுகிறது. [2]

மாவட்ட எல்லைகள்தொகு

முக்த்சர் மாவட்டத்தின் தெற்கில் அரியானா மாநிலம்; வடக்கில் பரித்கோட் மாவட்டம், மேற்கில் பெரோஸ்பூர் மாவட்டம், கிழக்கில் பதிண்டா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்தொகு

இம்மாவட்டம் முக்த்சர், மாலௌட், கித்தர்பாகா என மூன்று வருவாய் வட்டங்களையும், முக்த்சர், மாலௌட், லம்பி மற்றும் கோட் பாய் என நான்கு ஊராட்சி ஒன்றியங்களையும்; 234 கிராமங்களையும் கொண்டுள்ளது. [3]

அரசியல்தொகு

முக்த்சர் மாவட்டத்தில் முக்த்சர், மாலௌட், கித்தர்பாகா மற்றும் லம்பி என மூன்று சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.

மக்கள் தொகையியல்தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 901,896 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 72.04% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 27.96% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 16.00% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 475,622 ஆண்களும் மற்றும் 426,274 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 896 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 2,593 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 348 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 65.81% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.76% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 59.24% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 104,419 ஆக உள்ளது. [4]

சமயம்தொகு

இம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 638,625 (70.81 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 254,920 (28.26 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 4,333 (0.48 %) ஆகவும், கிறித்தவ, பௌத்த, சமண சமய மக்கள் தொகை மிகக் குறைவாக உள்ளது.

மொழிகள்தொகு

பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.


மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு


ஆள்கூறுகள்: 30°28′24″N 74°30′55″E / 30.47324°N 74.515412°E / 30.47324; 74.515412