ஸ்ரீ முக்த்சர் சாகிப்
சிறீ முக்த்சர் சாகிப் (Sri Muktsar Sahib), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முக்த்சர் சாகிப் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். [1]2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 1,17,085 ஆகும்.[2]சிறீ முக்த்சர் மாவட்டத்தின் சராய்நாகா கிராமத்தில் சீக்கியர்களின் இராண்டாவது குருவான அங்கத் தேவின் பிறந்தார்.[3]இந்நகரத்தில் 29 டிசம்பர் 1705 அன்று முகலாயப் பேரரசுப் படைகளுக்கும், மாய் பாகோ எனும் சீக்கியப் பெண் தலைமையிலான 40 சீக்கிய வீரர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்றது.
முக்தர் சாகிப் | |
---|---|
நகரம் | |
சிறீ முக்தர் சாகிப் | |
அடைபெயர்(கள்): முக்தர் | |
ஆள்கூறுகள்: 30°17′N 74°19′E / 30.29°N 74.31°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | முக்த்சர் |
அரசு | |
• நிர்வாகம் | சிறீ முக்தர் சாகிப் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 12.66 sq mi (32.80 km2) |
ஏற்றம் | 648.52 ft (197.67 m) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,17,085 |
• தரவரிசை | பஞ்சாபின் 14வது பெரிய நகரம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 152026 |
தரை வழி தொலைபேசி குறியீடு | 01633 |
வாகனப் பதிவு | PB-30 |
இணையதளம் | muktsar |
அமைவிடம்
தொகுபஞ்சாப் மாநிலத்தின் தென்மேற்கில், மால்வா பிரதேசத்தில், தார் பாலைவனத்திற்கு வடக்கே அமைந்த சிறீ முக்த்சர் சாகிப் நகரம், சண்டிகர் நகரத்திற்கு கிழக்கே 246 கிலோ மீட்டர் தொலைவிலும், தில்லிக்கு வடமேற்கே 385 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,23,644 வீடுகளும்; 23 வார்டுகளும் கொண்ட முக்த்சர் சாகிப் நகரத்தின் மக்கள் தொகை 1,16,747 ஆகும். அதில் ஆண்கள் 61,725 மற்றும் பெண்கள் 55,022 ஆக உள்ளனர். 6 வயதிற்குற்பட்ட குழந்தைகள் 13,981 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 891 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 76.49% ஆக உள்ளது. பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 32.88 % மற்றும் 0 ஆக உள்ளனர். இந்துக்கள் 55.56%, சீக்கியர் 42.77%, இசுலாமியர் 1.09%, கிறித்துவர் 0.34% மற்றும் பிறர் 0.25% ஆக உள்ளனர்[4]இந்நகரத்தில் மால்வாய் கிளைமொழி அதிகம் பேசப்படுகிறது.
போக்குவரத்து
தொகுகுற்றகலப் பாதையால் இணைக்கப்பட்டுள்ள முக்த்சர் சாகிப் தொடருந்து நிலையத்திற்கு அன்றாடம் 12 தொடருந்துகள் வந்து செல்கிறது.[5]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Govt approves change in names of 25 towns". PTI. Bennett, Coleman & Co. Ltd.. 12 February 2012. http://timesofindia.indiatimes.com/india/Govt-approves-change-in-names-of-25-towns/articleshow/11859587.cms.
- ↑ "Cities having population 1 lakh and above, Census 2011" (PDF).
- ↑ "Sri Guru Angad Dev Ji".
- ↑ Muktsar Town Population Census 2011
- ↑ Sri Muktsar Sahib Railway Station