குருதி நச்சு
குருதி நச்சு (Toxemia, toxaemia) என்பது இரத்தத்தில் நச்சு கலந்து காணப்படும் நிலையாகும். இங்கு நச்சு என்பது நுண்ணுயிரிகளால் தோற்றுவிக்கப்பட்டு, நோய்களை (நச்சேற்ற நோய், Toxicosis, Toxinosis) உண்டாக்குகின்ற (அல்லது) நோய்த் தாக்கத்தினை அதிகரிக்கும் பொருளாகும். இரத்தமானது, சாதரணமாக ஒரு நுண்ணுயிரற்ற திரவமாக உள்ளது[1]. எனவே, இரத்தத்தில் கிருமிகள்; பாக்டீரியாக்கள் (Bacteremia), பூஞ்சைகள் (Fungemia), தீநுண்மங்கள் (Viremia) காணப்படுவது என்பது ஒரு அசாதாரண நிலையாகும். நுண்ணுயிரிகளிலிருந்து வெளிப்படும் நச்சுகள் நேரடியாக ஓம்புயிர்த் திசுக்களைச் சிதைத்தும், நோயெதிர்ப்பு அமைப்பைச் செயலிழக்கச் செய்தும் கிருமித் தொற்றுகளையும், பிணியையும் அதிகரிக்க உதவுகின்றன.