குருனெரைட்டு

ஆம்பிபோல் இரட்டைச் சங்கிலி இனோசிலிக்கெட்டு

குருனெரைட்டு (Grunerite) என்பது Fe7Si8O22(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஆம்பிபோல் குழு கனிமங்கள் வகையைச் சேர்ந்த கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. குருனெரைட்டு-கும்மிங்டோனைட்டு வரிசையில் இரும்பைக் கொண்டுள்ள இறுதி உறுப்பினராக குருனெரைட்டு கருதப்படுகிறது. இக்கனிமம் இழை வடிவில் சிறு தூண்களாக அல்லது பெருந்தொகுதிகளாக உருவாகிறது.

குருனெரைட்டுGrunerite
தெற்கு தக்கோட்டாவின் குருனெரைட்டு
பொதுவானாவை
வகைஇனோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுFe7Si8O22(OH)2
இனங்காணல்
மோலார் நிறை1,001.61 கி/மோல்
நிறம்பழுப்பு, பழுப்புப் பச்சை, அடர் சாம்பல்
படிக இயல்புதூண்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
மோவின் அளவுகோல் வலிமை5 - 6
மிளிர்வுபளபளப்பானது
கீற்றுவண்ணம்நிறமற்றது.
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது மற்றும் ஒளி கசியும்
ஒப்படர்த்தி3.45
அடர்த்தி3.4 - 3.5
புறவூதா ஒளிர்தல்ஒளிராது
பிற சிறப்பியல்புகள்கதிரியக்கம் இல்லை
மேற்கோள்கள்[1][2]

இக்கனிமம் இழை வடிவில் சிறு தூண்களாக அல்லது பெருந்தொகுதிகளாக உருவாகிறது. படிகங்கள் பட்டகம் போன்று ஒற்றைசரிவச்சு படிகங்களாக இவை படிகமாகின்றன. கண்ணாடி, முத்து போன்ற பளபளப்புடன் பச்சை, பழுப்பு, அடர் சாம்பல் வண்ணங்களில் இப்படிகங்கள் காணப்படுகின்றன. மோவின் அளவு கோலில் குருனெரைட்டின் கடினத்தன்மை மதிப்பு 5-6 என்றும் ஒப்படர்த்தி அளவு 3.4 முதல் 3.5 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

1853 ஆம் ஆண்டு சுவிசு-பிரெஞ்சு வேதியியலாளர் இம்மானுவேல் –இலூயிசு குருனெர் முதன் முதலில் குருனெரைட்டு கனிமத்தைக் கண்டுபிடித்தார்.

அமோசைட்டு (இழை குருனெரைட்டு)

தொகு

அமோசைட்டு என்பது ஓர் அரிய கல்நார் வடிவத் தோற்றமுடைய குருனெரைட்டு வடிவமாகும். தென் ஆப்பிரிக்காவின் திரான்சுவால் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் அமோசைட்டு எனப்படும் இழை குருனெரைட்டு வகை வெட்டி எடுக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்க ஆசுபெசுடாசு சுரங்கங்கள் என்ற ஆங்கில சொற்களின் சுருக்கப் பெயரே அமோசா என்றாகி அமோசைட்டு என்ற பெயரானது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் குருனெரைட்டு கனிமத்தை Gru[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Webmineral data
  2. Mindat
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருனெரைட்டு&oldid=3938030" இலிருந்து மீள்விக்கப்பட்டது