குரு ஜம்பேசுவரர்

பிஷ்னோய் பந்தின் நிறுவனர்

குரு ஜம்பேசுவரர் (Guru Jambheshwar) என்பவர் குரு ஜம்பாஜி (1451-1536) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பிஷ்னோய் பந்தின் நிறுவனர் ஆவார்.[1] கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கும் ஒரு தெய்வீக சக்தி என்று இவர் போதித்தார். இயற்கையுடன் அமைதியாக இணைந்து வாழ்வதற்குத் தாவரங்கள் மற்றும் விலங்குகள் முக்கியம் என்பதால் இவற்றைப் பாதுகாக்கவும் இவர் கற்றுக் கொடுத்தார்.

குரு ஜம்பேசுவரர்
Guru Jambheshwar Bhagwan
குரு ஜம்பேசுவரர்
தேவநாகரிगुरु जंभेश्वर
வகைபிஷ்னோய் (வைணவம்)
மந்திரம்"Vishnu Vishnu tu bhan re prani"
சமயம்இராசத்தான், இந்தியா
விழாக்கள்ஜம்பேசுவரர் ஜென்மாஷ்டமி, அம்மாவாசை விரதம்

 

வாழ்க்கை வரலாறு

தொகு

ஜம்பேசுவர் ஜி 1451-ல் நாகூர் மாவட்டம் பிபாசார் கிராமத்தில் பன்வார் குலத்தின் குடும்பத்தில் பிறந்தார்.[2][3][4] இவர் லோஹத் பன்வார் மற்றும் ஹன்சா தேவியின் ஒரே குழந்தை. குரு ஜாம்பேடுவர் தனது வாழ்க்கையின் முதல் ஏழு ஆண்டுகள், அமைதியாகவும் உள்ளக சிந்தனையுடனும் காணப்பட்டார். இவர் தனது வாழ்நாளில் 27 ஆண்டுகளை மாடு மேய்ப்பவராகவே கழித்தார்.[5]

பிஷ்னோய் பந்த் நிறுவுதல்

தொகு

தனது 34 வயதில், குரு ஜம்பேசுவர் சாம்ராதல் தோராவில் வைணவ சமயத்தின்[6] பிஷ்னோய் துணைப் பிரிவை நிறுவினார். இவரது போதனைகள் ஷபத்வானி எனப்படும் கவிதை வடிவிலிருந்தன.  இவர் அடுத்த 51 ஆண்டுகள் பிரசங்கித்தார். இதற்காக நாடு முழுவதும் பயணம் செய்தார். மேலும் ஷபத்வானியின் 120 ஷபாத்கள் எனப்படும் வசனங்களை உருவாக்கினார்.[7] 1485-ல் ராஜஸ்தானில் பெரிய வரைவுக்குப் பிறகு இந்த பிரிவு நிறுவப்பட்டது. இந்தப் பிரிவினர் பின்பற்ற வேண்டிய 29 கொள்கைகளையும் ஜம்பேசுவர் வகுத்திருந்தார். விலங்குகளைக் கொல்வதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் தடை விதித்தார். வன்னி மரம் (புரோசோபிசு சினேரியா), பிசுனோயிசால் புனிதமாகக் கருதப்படுகிறது.

 
சாம்ராதல் தோராவில் உள்ள பிஷ்னோய் கோயில்

பிஷ்னோய் பந்த் 29 விதிகளைச் சுற்றி வருகிறது. இவற்றில், எட்டு பல்லுயிரியலைப் பாதுகாக்கவும், நல்ல கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கவும், ஏழு ஆரோக்கியமான சமூக நடத்தைக்கான கோட்பாடுகளை வழங்குகின்றன. மேலும் பத்து தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளன. மற்ற நான்கு கட்டளைகள் தினமும் விஷ்ணுவை[8] வழிபடுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.

பெருமையும் நினைவும்

தொகு

பிஷ்னோய்கள் பல்வேறு கோயில்களைக் கொண்டுள்ளனர். இவற்றில் இராசத்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள நோகா வட்டத்தில் முகம் கிராமத்தில் உள்ள "முகம் முக்தி தாம்" மிகவும் புனிதமானதாக இவர்கள் கருதுகின்றனர். குரு ஜம்பேஷ்வரின் சமாதியின் மீது மிகவும் புனிதமான பிஷ்னோய் கோவில் கட்டப்பட்டுள்ளது.[9] அரியானா மாநிலத்தில் ஹிசாரில் உள்ள குரு ஜம்பேசுவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இவரை நினைவு கூறும் விதமாக இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. மேலும் நியூஸ்29 பரணிடப்பட்டது 2022-10-03 at the வந்தவழி இயந்திரம்-ல் குரு ஜம்பேசுவரரைப் பற்றி அறிய மேலும் படிக்கலாம்.

 
நோகா, முகத்தில் உள்ள பிஷ்னோய் கோயில்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Read Jambhsagar Page 1
  2. गुरु जम्भेश्वर जी की दृष्टि में विष्णु का वैदिक स्वरूप. Jambhani Sahitya Akadmi. January 2016.
  3. Guru Shri Jambhoji and Sabadvaani. Jambhani Sahitya Akademi. January 2018.
  4. Bishnoi. Jambhani Sahitya Akadmi. January 2016.
  5. Jambhsagar Page 9-13
  6. Worshippers of Vishnu fall under the vaishnava sect of hinduism
  7. Jambhsagar Page 24-26
  8. 6th Rule of Bishnois tells about worshipping Vishnu
  9. "Major Attractions". Archived from the original on 6 August 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-07-27.

12. குரு ஜாம்பேஷ்வர் பற்றி News29.co பரணிடப்பட்டது 2022-10-03 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_ஜம்பேசுவரர்&oldid=3707752" இலிருந்து மீள்விக்கப்பட்டது