குரைக்கும் நாய் வினை

குரைக்கும் நாய் வினை (Barking Dog Reaction) என்பது கார்பன் இருசல்பைடு, நைட்ரஸ் ஆக்சைடு கலவையைப் பற்றவைக்கும் போது நிகழும் ஒரு வெப்ப உமிழ் வேதி வினையாகும்.[1]

இவ்வினை பல நூற்றாண்டுகளாக அறியப்பட்டு வருகிறது; 1853 ஆம் ஆண்டில் ஜஸ்டசு வான் லீபிக் தன்னுடைய மாணவர்களை வசப்படுத்தி விளக்குவதற்காக இவ்வினையில் உருவான அடர் நீலநிற பளீரொளியையும் ஒரு தனித்துவமான குரைப்பு ஒலியையும் பயன்படுத்திக் கொண்டார்.

குரைக்கும் நாய் வினையை சுருங்கச் சொல்வதென்றால் இது ஒரு எரிதல் செயல்முறை வினையாகும். இவ்வினையில் கார்பன் இருசல்பைடு (CS2), ஆக்சிசனேற்ற முகவரான நைட்ரஸ் ஆக்சைடுடன் (N2O) உடன் வினைபுரிந்து வெப்பத்தையும் உலோக கந்தகத்தையும் உண்டாக்குகிறது. வினைபடுபொருள்கள் சிதைவதால் உண்டாகும் ஒளிரும் எரிவாயு காரணமாகவும், வினையில் உருவாகும் தீச்சுவாலையின் காரணத்தாலும் சுவாலைச் சுற்றியுள்ள பகுதியெங்கும் அதிகமான வெப்பம் உமிழப்படுகிறது.

8 N2O + 4 CS2 → S8 + 4 CO2 + 8 N2

மேற்கோள்கள்

தொகு
  1. Taming the Barking Dog Seabourne, Ché Royce; Maxwell, George; Wallace, James. J. Chem. Educ. 2006 83 751. Link

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரைக்கும்_நாய்_வினை&oldid=3731562" இலிருந்து மீள்விக்கப்பட்டது