குரோமியம்-வனேடியம் எஃகு
குரோமியம்-வனேடியம் எஃகு (Chromium-vanadium steel) என்பது கார்பன், மாங்கனீசு, பாசுபரசு, கந்தகம், சிலிக்கான், குரோமியம் மற்றும் வனேடியம் முதலிய தனிமங்களை ஒருங்கிணைத்துக் கொள்ளும் ஓர் எஃகு உலோகக் கலவையாகும். இவற்றில் சில வடிவங்களை அதிவேக எஃகாக பயன்படுத்தமுடியும்[1] . குரோமியம் மற்றும் வனேடியம் இரண்டும் எஃகை அதிகக் கடினத் தன்மையுடையதாக மாற்றுகின்றன. குரோமியமானது, தேய்மானம், ஆக்சிசனேற்றம் மற்றும் அரிமானம் முதலியவற்றைத் தடுக்கவும் உபயோகமாகிறது.[2] குரோமியமும் கார்பனும் சேர்ந்து மீள்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Efunda (Retrieved September 30, 2012):
- ↑ "Chromium-Vanadium Steels". Archived from the original on அக்டோபர் 29, 2012. பார்க்கப்பட்ட நாள் September 30, 2012.
- ↑ "vanadium steel". http://www.farlex.com/. பார்க்கப்பட்ட நாள் September 30, 2012.
{{cite web}}
: External link in
(help)|publisher=
.