குரோமியம் அசைடு

வேதிச் சேர்மம்

குரோமியம் அசைடு (Chromium azide) என்பது Cr(N3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.. குரோமியம் மூவசைடு, குரோமியம் டிரையசைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.

குரோமியம் அசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(III) மூவசைடு
வேறு பெயர்கள்
  • குரோமியம்(III) அசைடு
  • குரோமியம் மூவசைடு
இனங்காட்டிகள்
15557-22-9 Y
ChemSpider 25935365
InChI
  • InChI=1S/Cr.3N3/c;3*1-3-2/q+3;3*-1
    Key: QTGXYCYBAVYYCM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 129686002
  • [N-]=[N+]=[N-].[N-]=[N+]=[N-].[N-]=[N+]=[N-].[Cr+3]
பண்புகள்
Cr(N3)3
வாய்ப்பாட்டு எடை 178.06 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பண்புகள்

தொகு

குரோமியம் அசைடு உருவாக்கம் குரோமியம் உப்புகள் மற்றும் சோடியம் அசைடு ஆகியவற்றிலிருந்து ஆராயப்பட்டது. சோடியம் அசைடுடன் தூய ஆல்ககாலில் உள்ள உலர்ந்த படிக குரோமியம்(III) நைட்ரேட்டு கரைசலை ஆவியாக்குவதன் மூலம் குரோமியம் அசைடு 1922 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டது.[1] ஒளியளவு நிறநிரலியல் ஆய்வின் மூலம், குரோமியம்(III) நைட்ரேட்டு கரைசலின் பச்சை நிறத்திற்குக் காரணம் மோனோ-அசிடோ-குரோமியம்(III) அணைவு என்று காட்டப்பட்டது. இரண்டு உறிஞ்சக்கூடிய நிலைகள் அதிகபட்சம் 445 மற்றும் 605 நானோமீட்டரில் அமைந்திருந்தது.[1] குரோமியம் அசைடு அதன் ஒளியியல் செயலில் உள்ள Cr3+ அயனிகளில் இருந்து ஒளிர்வு பண்புகளைக் கொண்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Sherif, F. G.; Oraby, W. M. (4 August 1960). "The structure of chromium azide: Its instability constant in aqueous solutions". J. Inorg. Nucl. Chem. 17 (1–2): 152–158. doi:10.1016/0022-1902(61)80201-7. https://dx.doi.org/10.1016/0022-1902%2861%2980201-7. பார்த்த நாள்: 30 October 2023. 
  2. Trzebiatowska, M.; Hermanowicz, K. (3 December 2020). "The mechanism of phase transitions and luminescence properties of azide perovskites". Spectrochimica Acta Part A: Molecular and Biomolecular Spectroscopy 255. doi:10.1016/j.saa.2021.119716. பப்மெட்:33784594. https://www.sciencedirect.com/science/article/pii/S1386142521002924. பார்த்த நாள்: 30 October 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்_அசைடு&oldid=4062501" இலிருந்து மீள்விக்கப்பட்டது