குரோமியம் அறுபுளோரைடு

குரோமியம் அறுபுளோரைடு (Chromium hexafluoride or chromium(VI) fluoride) என்பது CrF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கருத்தியலான கனிம வேதியியல் சேர்மமாகும். முன்னதாக இச்சேர்மம் -100 0 செ வெப்பநிலையில் [1] சிதைவடையக்கூடிய ஒரு மஞ்சள் நிறமான திண்மம் எனக் கருதப்பட்டது. ஆனால் , பின்னர் இது குரோமியம் ஐம்புளோரைடு (CrF5) .[2] என அறியப்பட்டது.

தோல்வியில் முடிந்த தொகுப்பு முறைகள்

தொகு

குரோமியம் உலோகத்தை 4000 செ வெப்பநிலையில் 20 மில்லியன் பாஸ்கல் அழுத்தத்தில் செயலறு நிலை புளோரினேற்றம் செய்து உடனடியாக வினைகலனில் இருந்து நீக்கி உறைய வைத்தால் சிதைவடைவைத் தடுத்து இதைத் தயாரிக்க முடியும் எனக் கருதப்பட்டது.

Cr + 3 F2 → CrF6

ஆனாலும், குரோமியம் அறுபுளோரைடுக்குப் பதிலாக குரோமியம் ஐம்புளோரைடுதான் உருவானது.

2 Cr + 5 F2 → 2 CrF5

குரோமியம் அறுபுளோரைடு இன்றுவரை தயாரிக்கப்படவில்லை...

மேற்கோள்கள்

தொகு
  1. Hope, Eric G.; Levason, William.; Ogden, J. Steven. (1991). "Is chromium hexafluoride octahedral? Experiment still suggests "yes!"". Inorganic Chemistry 30 (26): 4873. doi:10.1021/ic00026a002. 
  2. Riedel, Sebastian; Kaupp, Martin (2009). "The highest oxidation states of the transition metal elements". Coordination Chemistry Reviews 253 (5–6): 606–624. doi:10.1016/j.ccr.2008.07.014. http://144.206.159.178/ft/243/588116/14862785.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமியம்_அறுபுளோரைடு&oldid=4088945" இலிருந்து மீள்விக்கப்பட்டது