குர்த்தி மேலாடை

குர்தி மேலாடை (Kurti top) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் அணியும் மேல் ஆடை ஆகும். இது மேலங்கி, கச்சுரை மற்றும் இரவிக்கைகளை உள்ளடக்கியது.

குர்தி

தொகு

நவீன பயன்பாட்டில், ஒரு குறுகிய குர்த்தா குர்தி என்று குறிப்பிடப்படுகிறது. இது பெண்களின் உடையாகும். இருப்பினும், பாரம்பரியமாக, குர்தி என்பது மேலங்கி,[1] கச்சுரைகள் மற்றும் இரவிக்கைகள்[2] பக்கவாட்டு பிளவுகள் இல்லாமல் இடுப்புக்கு மேலே உள்ளவாறு அணியப்படுகிறது. மேலும் இவை சுங்கர் காலத்தின் (கிமு 2 ஆம் நூற்றாண்டு) ஆடையிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது.[3] குர்தியானது சோளியிலில் காணப்படும் நடுப்பகுதியின் அடிப்படையில் வேறுபடுத்தப்படுகிறது.

இது இந்தியர்களின் குறிப்பாக வட இந்தியரின் பொதுவான ஆடை முறையாகும்.

இந்த ஆடை பாணியின் போக்கு மற்றும் தோற்றம் வட இந்தியாவில் தோன்றியதாகும். இன்றும் நாட்டின் பிற பகுதிகள் நவீனமயமாக்கப்பட்ட குர்தி ஆடைகளை அணிகின்றனர். ஆனால் இது பெரும்பாலும் வட இந்தியாவில் பெண்களால் அணியப்படுகிறது. ஆனால் தென்னிந்தியர் சேலை அணிவதை விரும்புகிறார்கள்.

குர்தியின் பல வகைகள் உள்ளன. இவற்றில் பின்வருவன அடங்கும்:

பஞ்சாபி குர்தி

தொகு

பஞ்சாப் பகுதியில், குர்தி என்பது பருத்தி மேலங்கி ஆகும்.[4] இது இடுப்பு வரை முன் கீழே பொத்தான்கள் போடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில், பெண்கள் பொத்தான்களைச் சுற்றி ஜாஞ்சிரி என்று அழைக்கப்படும் தங்கம் அல்லது வெள்ளி சங்கிலியை அணிந்தனர். பஞ்சாப் பகுதியில் ஆண்கள் குர்தாவில் ஜாஞ்சிரி அணிந்திருந்தனர்.[5]

பஞ்சாபி குர்தியின் மற்றொரு பாணி அங்காவின் (அங்கி) குறுகிய பதிப்பாகும்.[6] குர்தி அரை அல்லது முழு கை மற்றும் இடுப்பு நீளம் முன் அல்லது பின் திறப்பு இல்லாமல் இருக்கலாம். ஆண்களின் குர்தியை பஞ்சாபியில் பாதுய் அல்லது மேலங்கி என்று அழைத்தனர்.[7] பாக்கித்தானின் தெற்கு பஞ்சாபின் குர்தி சராய்கி குர்தி என்று குறிப்பிடப்படுகிறது.

நுகர்வோரின் விருப்பத்தின் அடிப்படையில் குர்தியின் நீளத்தை மாற்றியமைக்க முடியும்.

பிகாரி குர்தி

தொகு

பீகாரில், குர்தி என்ற சொல்[8] கச்சுடை மற்றும் மேல் சட்டையின் கலவையான மகளிர் சட்டை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

உத்தரப்பிரதேசம்

தொகு

உத்தரப்பிரதேசம் மற்றும் இமயமலைப் பகுதியில் குர்தி குட்டையான ரவிக்கையினைக் குறிக்கின்றது.[9]

குசராத்து

தொகு

குஜராத் மற்றும் கத்தியவாரில், குர்தி வகை இடுப்புக்குக் கீழே வரை விழுகிறது.[10]

இராசத்தான்

தொகு

இராசத்தானில் உள்ள ஆண்களுக்கான குர்த் என்பது முழு கை, இறுக்கமாக பொருத்தப்பட்ட, பொத்தான் இல்லாத கஞ்சுகத்துடன் கூடியது.[11][12]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Forbes, Duncan (1861) A smaller Hindustani and English dictionary
  2. Bahri, Hardev (2006) Advanced learner's Hindi English Dictionary
  3. Panjab University Research Bulletin: Arts, Volume 13, Issue 1 - Volume 14, Issue (1982)
  4. Punjab District Gazetteers: Rawalpindi District (v. 28A) (1909)
  5. Kehal, Harkesh Singh (2011) Alop ho riha Punjabi virsa bhag dooja. Lokgeet Parkashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5017-532-3
  6. Compiled and published under the authority of the Punjab government (1939)Punjab District and State Gazetteers: Part A.
  7. Walter Pullin Hares (1929) An English-Punjabi Dictionary
  8. Flynn, Dorris (1071) Costumes of India
  9. Vanessa Betts, Victoria McCulloch (2014) Indian Himalaya Footprint Handbook: Includes Corbett National Park, Darjeeling, Leh, Sikkim
  10. Sharma, Brijendra Nath (1972) Social and Cultural History of Northern India: C. 1000-1200 A.D
  11. "Sleeveless Kurt Designs For Women". gounique. 2 December 2021.
  12. Census of India, 1961: Rajasthan
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்த்தி_மேலாடை&oldid=3948581" இலிருந்து மீள்விக்கப்பட்டது