குர்பிந்தர் கவுர் பிரார்

இந்திய அரசியல்வாதி

குர்பிரிந்தர் கவுர் பிரார் (Gurbinder Kaur Brar)(12 ஆகத்து 1922 - 7 செப்டம்பர் 2013) என்பவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார்.

குர்பிந்தர் கவுர் பிரார்
பஞ்சாப் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
29 செப்டம்பர் 1985 – 11 மே 1987
முன்னையவர்பிரகாஷ் சிங் பாதல்
பின்னவர்சத்னம் சிங் கைந்த்
தொகுதிமுக்தர்
ஏழாவது மக்களவை உறுப்பினர்
பதவியில்
1980–1984
முன்னையவர்பல்வந்த் சிங் ராமுவாலியா
பின்னவர்சமீந்தர் சிங்
தொகுதிபரித்கோட் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-08-12)12 ஆகத்து 1922
கைரோன், பஞ்சாப், இந்தியா
இறப்பு7 செப்டம்பர் 2013(2013-09-07) (அகவை 91)
சண்டிகார், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அரிசரண் சிங் பிரார்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

குர்பிந்தர் கவுர் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கைரோன் கிராமத்தில் 12 ஆகத்து 1922 அன்று ஜஸ்வந்த் சிங்கின் மகளாக பிறந்தார். இவர் லாகூரில் உள்ள கின்னார்ட் கல்லூரியில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் லாகூரில் உள்ள அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1] இவர் பர்தாப் சிங் கைரோனின் மருமகள் ஆவார்.

அரசியல்

தொகு

பிரார் தனது இளமைப் பருவத்தில் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். மேலும் இவரது பணியை அங்கீகரிக்கும் வகையில், பிரார் 1964-ல் பெரோஸ்பூர் மாவட்ட காங்கிரசு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். பிரார் 1970 வரை இப்பதவியிலிருந்தார். பாரதிய கிராமின் மகிளா சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[1]

பிரார் தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் 1972-ல் மாலூட்டில் போட்டியிட்டு 11,676 வாக்குகள் வித்தியாசத்தில் சிரோமணி அகாலி தளத்தின் குர்மீத் சிங்கை தோற்கடித்தார்.[2] அடுத்த ஆண்டு, பஞ்சாபின் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயில் சிங், பிராரை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்.[3] இவர் வீட்டுவசதி மற்றும் குடிசை மாற்று வாரியம், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகர்ப்புற தோட்டங்கள் மற்றும் வாழ்விடங்களுக்கான மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4]

பின்னர் காங்கிரசு கட்சி ஏழாவது மக்களவைக்கான தேர்தலில் பரித்கோட்டில் பராரை நிறுத்தியது, பிரார் சிரோமணி அகாலி தளத்தின் பல்வந்த் சிங் ராமுவாலியாவை தோற்கடித்தார். இவருக்கு எதிராக பிரார், 46.06% வாக்குகளை 50.43% பெற்றார்.[5] பிரார் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், பொது நிறுவனங்களுக்கான குழுவில் பணியாற்றினார்.[6] நாடாளுமன்ற உறுப்பினராகத் தனது பதவிக்காலம் முடிந்து ஒரு வருடம் கழித்து, பிரார் 1985 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் முக்த்சரிலிருந்து போட்டியிட்டு 5,277 வாக்குகள் வித்தியாசத்தில் தனது நெருங்கிய போட்டியாளரைத் தோற்கடித்தார். மாநில சட்டமன்றத்தில் பிரார்எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சிரோமணி அகாலி தளம் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியினை அமைத்தது.[7][8]

பிராரின் கணவர் அரிசரண் சிங் பிரார் முதலமைச்சரான பிறகு, பிரார் 1996-ல் குறுகிய காலம் பஞ்சாப் பிரதேச காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டார் [9]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

குர்பிந்தர் 24 பிப்ரவரி 1948-ல் அரிசரண் சிங் பிராரை மணந்தார்.[1] இவர்களுக்கு ஆதேஷ் கன்வர்ஜித் சிங் பிரார் என்ற மகனும், கமல்ஜித் 'பாப்லி' பிரார் என்ற மகளும் இருந்தனர்.[7] இவர் 7 செப்டம்பர் 2013 அன்று சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இறந்தார்.[6][10][11]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Members Bioprofile: Brar,Smt. Gurbrinder Kaur". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
  2. "Statistical Report on General Election, 1972 to the Legislative Assembly of Punjab" (PDF). Election Commission of India. p. 15. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
  3. Party Politics in Punjab. Harnam Publications. p. 119.
  4. Asian Recorder. K. K. Thomas. p. xi.
  5. "Statistical Report on General Election, 1980 to the Seventh Lok Sabha" (PDF). Election Commission of India. p. 197. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
  6. 6.0 6.1 "Fifteenth Loksabha: Session : 14 Date : 05-12-2013". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
  7. 7.0 7.1 . 
  8. "Statistical Report on General Election, 1985 to the Legislative Assembly of Punjab" (PDF). Election Commission of India. pp. 9, 118. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
  9. "CM in trouble: Dissidents confront Punjab Chief Minister Harcharan Singh Brar". http://indiatoday.intoday.in/story/dissidents-confront-punjab-chief-minister-harcharan-singh-brar/1/282946.html. 
  10. "Badal, Bajwa mourn death of former CM's wife". http://www.hindustantimes.com/chandigarh/badal-bajwa-mourn-death-of-former-cm-s-wife/story-QdkIsbFWgCjMLnyyvN2RFO.html. பார்த்த நாள்: 2 November 2017. 
  11. "Ex-CM Brar’s wife dies at 85". http://www.tribuneindia.com/2013/20130908/punjab.htm#10. பார்த்த நாள்: 2 November 2017.