குறத்தியறை ஒளவையாரம்மன் கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தின் பூதப்பாண்டிக்கு வடக்கே குறத்தியறை என்னும் சிற்றூரில் ஒளவையாரம்மன் கோயில் உள்ளது.[1] இக்கோயில் சங்ககாலப்புலவர் ஒளவையாருக்கென கட்டப்பட்டது. ஔவையாரை ஔவையாரம்மன் என அம்மனுக்கான பின்னோட்டோடு அழைக்கின்றனர்.

சிறப்பு வழிபாடு தொகு

ஆடிச் செவ்வாய் கிழமைகளில் ஒளவையாரம்மன் கோயிலில் கூழும் கொழுக்கட்டைகளும் படைக்கப்படுகின்றன.[2][3]

தொன்மம் தொகு

குறத்தியறை ஒளவையாரம்மன் கோயிலில் தங்கள் பெண்ணின் திருமணத்திற்கு எட்டு நாட்களுக்கு முன்பு வந்து ஒளவையாருக்கு வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். அந்த வழிபாடு முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ஔவையாரம்மன் சந்நிதியில் ஆபரணங்கள் நிறைந்த தங்க தாம்பாளம் இருந்ததாகவும், ஆபரணங்களை மணமக்களுக்கு அணிவித்து திருமணம் நடத்தியுள்ளனர். பின்பு தாம்பாளத்தை திருமணம் முடிந்த எட்டு நாட்களுக்குப் பிறகு அம்மனுக்கு அர்ச்சனை செய்து திருப்பி வைத்துள்ளார்கள்.

தட்டினை வைக்கும் போது எடுத்தேன் என அம்மன் அசிரீரியாத கூறுவார். ஒருமுறை இவ்வழக்கத்தை பார்த்தேன் என ஒருவன் கூற அதிலிருந்து இவ்வழக்கம் தடைபட்டதாக கூறுகின்றனர்.

ஆதாரங்கள் தொகு

  1. "கூழுக்குக் கவி பாடிய கூனக்கிழவி". Dinamani.
  2. ஆர், சிந்து (17 சூலை 2018). "முருகனிடமிருந்து சுட்டபழம் பெற்ற ஔவையாரம்மன் கோயிலில் கொழுக்கட்டை படையலிட்ட பெண்கள்!". https://www.vikatan.com/. {{cite web}}: External link in |website= (help)
  3. "ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி அவ்வையார் அம்மன் கோவிலில் கொழுக்கட்டை படைத்து வழிபாடு". www.dailythanthi.com. 19 ஜூலை, 2017. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள் தொகு

ஆடிச்செவ்வாய் வழிபாடு - ஔவையார்