குறிச்சியா மொழி
குறிச்சியா மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், கேரளாவின், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்திலும் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 29,375 மக்களால் பேசப்படுகிறது.
குறிச்சியா | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | கேரளா, தமிழ்நாடு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 29,375 (1981) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | kfh |
கோவோகன், குறிச்சியார், குருச்சன் போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு. இம்மொழி பேசியோரில் பலர் இதனைக் கைவிட்டு மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளுக்கு மாறிவருவதாகக் கூறப்படுகின்றது. இதனால் இம்மொழி அழியும் ஆபத்து உள்ள மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.