குறிஞ்சிவேலன்

குறிஞ்சிவேலன் (Kurinjivelan) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். பாரம்பரிய நெசவு தொழில் செய்யும் செங்குந்தர் குலத்தில் இவர் பிறந்தார். பன்மொழிப்புலவரான இவரது இயற்பெயர் ஆ.செல்வராசு என்பதாகும். அறுபது ஆண்டுகளாக மலையாளப் படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறார்.[1] மலையாள இலக்கியத்தின் மூன்று தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் ‘விலாசினி‘ அவர்களின் 4300 பக்கங்களைக் கொண்ட ‘அவகாசிகள்’ என்னும் நாவலின் மொழியாக்கத்தை நிறைவு செய்துள்ளார். ஐந்து சிறுகதைகள், ஒரு குறுநாவல், பலகட்டுரைகள் என படைப்பிலக்கியத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

குறிஞ்சிவேலன்
மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலன்
பிறப்புஆ. செல்வராசு
(1942-06-30)30 சூன் 1942
தொழில்இடைநிலை ஆசிரியர், முதுநிலை கால்நடை ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர்
தேசியம்இந்தியர்
குடியுரிமை இந்தியா
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்ய அகாதமி விருது
துணைவர்கள்காந்திமதி
பிள்ளைகள்செ. பார்வதி, செ. சரவணன், செ. வைத்திநாதன்

தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளை பேசவும் எழுதவும் தெரிந்த இவருக்கு சிறந்த மொழிப்பெயர்ப்புகான சாகித்திய அகாதமி விருது கிடத்துள்ளது. விசக்கன்னி என்னும் மலையாள நூலை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தமைக்கு 1994 ஆம் ஆண்டு இவருக்கு சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. மலையாள நூலை தமிழ் மொழிபெயர்ப்பு செய்து சாகித்திய அகாதெமி பெற்ற முதல் நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளை நன்கு வாசிக்கத் தெரியும் என்பது இவருடைய கூடுதல் சிறப்பாகும்.

இந்தியா உட்பட உலகில் உள்ள நல்ல பயனுள்ள இலக்கியங்களை தமிழில் கொண்டு வரவும், இளம் மொழியாக்கப் படைப்பாளிகளை உருவாக்கவும், தமிழில் உள்ள சிறந்த படைப்புகளை பிற மொழியினர் அறிந்து கொள்ளும் வகையிலும் திசை எட்டும் என்ற மொழியாக்க காலாண்டிதழ் ஒன்றை தொடங்கி ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.[2] [3]இந்திய அளவில் மொழியாக்கதிற்கென்று வெளியிடப்படும் ஒரே மாநில மொழி இதழ் திசை எட்டும் இதழ் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.[4]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பிறப்பு

தொகு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சிப்பேட்டை என்னும் ஊரில் 1942 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் தேதி ஒரு நெசவாளர் குடியில் பிறந்தார்.

தொழில்

தொகு

1960 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்தார். கால்நடை ஆய்வாளர் பயிற்சியை முடித்து 1964 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் முதுநிலை கால்நடை ஆய்வாளராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

இலக்கியம்

தொகு

தொழிலுக்காக கேரள எல்லையோர சிற்றூர்களில் பணியாற்றியபோது மலையாளம் எழுதவும் படிக்கவும் கற்றார். சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த செம்மீன் நாவல் வழியாக மொழியாக்கத்தில் ஆர்வம் கொண்டார். மலையாளத்தில் வெளிவந்த ஒரு விமர்சனக்கட்டுரையை முதலில் இவர் மொழிபெயர்ப்புப்பணியாகச் செய்தார். அது தீபம் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து நந்தனார் மலையாளத்தில் எழுதிய பலியாடுகள் என்னும் கதையை மொழியாக்கம் செய்தார். நா.பார்த்தசாரதி நடத்திய தீபம் இதழில் எழுதத் தொடங்கிய பின்னர் குறிஞ்சிவேலன் என்ற புனைப் பெயரை சூட்டிக்கொண்டார்.

மொழியாக்கம் செய்த நூல்கள்

தொகு
  • ஐந்து சென்ட் நிலம்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன்[5] -1982,
  • சல்லி வேர்கள் – மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1988,
  • முழுமையைத்தேடும் முழுமையற்ற புள்ளிகள் பாகம் 1-வி.பி.சி. நாயர்- 1990,
  • காட்டு வெளியினிலே- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1991,
  • விஷக்கன்னி-எஸ்.கே.பொற்றெகாட் – 1991,
  • சிதைந்த சிற்பங்கள்-கே.வேணுகோபால் – 1992,
  • ஒரு நெஞ்சத்தின் ஓலம்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1993,
  • நான்கு முகங்கள்-பலர் -1994,
  • இரண்டு ஜென்மங்கள்-தகழி – 1994,
  • தகழி- ஐயப்பபணிக்கர் – 1994,
  • கண்ணாடியில் தோன்றும் உருவங்கள்-தகழி -1994,
  • பாரதப்புழையின் மக்கள்- எஸ்.கே.பொற்றெகாட் -1994,
  • ஆறாம் விரல்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1995,
  • நெட்டுர் மடம்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1995,
  • முனைப்பு-கே.வேணுகோபால் -1996,
  • அமிர்தம் தேடி- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1996,
  • மற்போர்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1997,
  • தேர்ந்தெடுத்த கதைகள்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1997,
  • இப்போது பனிக்காலம்-கிரேசி -1997,
  • மனமே மாணிக்கம்- மலையாற்றூர் ராமகிருஷ்ணன் -1998
  • பாண்டவபுரம்-சேது – 1999,
  • இரண்டாம் இடம்- எம்,டி,வாசுதேவன் நாயர் -2000
  • வானப்பிரஸ்தம்-எம்,டி,வாசுதேவன் நாயர் -2001,
  • எழுத்துமேதைகளின் முதல் கதைகள்-பலர் -2002,
  • பஷீர்-இ.எம்.அஷ்ரப் -2003,
  • முழுமையைத்தேடும் முழுமையற்ற புள்ளிகள் பாகம் 2- வி.பி.சி.நாயர் -2003,
  • ஆல்ஃபா-டி.டி.ராமகிருஷ்ணன் – 2005,
  • சூஃபி சொன்ன கதை-கே.பி.ராமனுண்ணி -2006,
  • காலம் முழுதும் கலை- இ.எம்.அஷ்ரப் -2006,
  • பாண்டவபுரம்-மிமி -சேது – 2006,
  • ராஜவீதி – பலர் – 2007
  • கோவர்தனின் பயணங்கள்- ஆனந்த்- 2012,
  • அடையாளங்கள்-சேது – (2013),
  • ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா-டி.டி.ராமகிருஷ்ணன் – (2014),
  • பிறை – சி.எஸ்.சந்திரிகா – (2015)
  • மலையாற்றூர் இராமகிருஷ்ணனின் நாவல்கள் – 2016
  • சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி-டி.டி.ராமகிருஷ்ணன்-2018
  • ஆறாவது பெண் -சேது -2020
  • வாரிசுகள்-விலாசினி (அச்சில்)
  • மாதா ஆப்பிரிக்கா-டி.டி.ராமகிருஷ்ணன் (2021)
  • குருடர் செவிடர் ஊமைகள் -டி.டி.ராமகிருஷ்ணன் (2022)
  • முதுகுளம் இராகவன் பிள்ளை (2022)

விருதுகள்

தொகு
  • சாகித்ய அகாதெமி விருது - 1994 [6]
  • தஞ்சை தமிழ்ப்பல்கலை விருது
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது

நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது

தொகு

2004 ஆம் ஆண்டு முதல் நல்லி-திசை எட்டும் என்ற மொழியாக்க விருதை உருவாக்கி மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழங்கி வருகிறார்.[7] 2023 ஆம் ஆண்டு வரை 156 மொழிபெயர்ப்பாளர்களுக்கு அறக்கட்டளை சார்பாக இவர் பரிசுத்தொகையும் பட்டயமும் வழங்கியிருக்கிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Transcending turbulence in translation". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-06-17.
  2. "A big hand for translators". The Times of India. 2012-07-29. பார்க்கப்பட்ட நாள் 2023-06-17.
  3. "தமிழம் வலை - புதிய இதழ்கள்". www.thamizham.net. பார்க்கப்பட்ட நாள் 2023-06-17.
  4. "மொழிபெயர்ப்பு த்தளத்தில் திசைஎட்டும் நிகழ்த்தும் சாகசம் – திண்ணை" (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-01-16. பார்க்கப்பட்ட நாள் 2023-06-17.
  5. "மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் நாவல்கள் :பகுதி1". தினமணி. https://www.dinamani.com/specials/nool-aragam/2016/oct/17/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF--1-2582157.html. பார்த்த நாள்: 17 June 2023. 
  6. "..:: SAHITYA : Akademi Awards ::." sahitya-akademi.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-17.
  7. "நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது பெற மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கு அழைப்பு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/apr/16/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF--%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-663395.html. பார்த்த நாள்: 17 June 2023. 

புற இணைப்புகள்

தொகு

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிஞ்சிவேலன்&oldid=3816667" இலிருந்து மீள்விக்கப்பட்டது