குறிப்பேடு
குறிப்பேடு ( notebook நோட்புக் எனப் பரவலாக அறியப்படுகிறது ) என்பது காகிதப் பக்கங்களின் அடுக்காகும். இவை குறிப்பெடுத்தல், நாட்குறிப்பு அல்லது பிற எழுதுதல், வரைதல் அல்லது வெட்டியொட்டற் புத்தகம் போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
வரலாறு
தொகுஆரம்ப காலங்களில் மெழுகுப் பலகைகளே குறிப்பேடுகளாகப் பயன்பட்டன. இது பாரம்பரியக் காலத்திலும் இடைக்காலத்திலும் மீண்டும் பயன்படுத்தக்கூடியதாகவும் எடுத்துச் செல்லக்கூடியதாகவும் பயன்படுத்தப்பட்டது.[1] 11 ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் காகிதம் மிகவும் எளிதாகக் கிடைத்ததால், மெழுகுப் பலகைகளின் பயன்பாடு இல்லாமல் போய்விட்டன.இருப்பினும், 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை வணிக ரீதியாக இங்கிலாந்தில் காகித ஆலையின் வளர்ச்சி ஏற்படாத வரையில் மெழுகுப் பலகைகள் பயன்பாட்டில் இருந்தது. [1] காகிதம் மெழுகுப் பலகையினை விட மலிவானதாக இருந்தபோதிலும், அழித்துவிட்டு மீண்டும் எழுதக் கூடிய குறிப்பேடுகளின் (இது பிரத்தியேகமாகச் சுத்திகரிக்கப்பட்ட காகிதத்தால் ஆனது, அதைச் சுத்தமாகத் துடைத்து மீண்டும் பயன்படுத்த முடியும்) விலை சற்று அதிகமாக இருந்தது.
சேக்சுபியரின் காலத்தில் இத்தகைய குறிப்பேடுகள் பரவலாகக் காணப்பட்டாலும், மிகச் சில உதாரணங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அவற்றின் சரியான தன்மை, பயன்பாடு அல்லது உற்பத்தியின் வரலாறு பற்றி போதிய தகவல்கள் இல்லை. [1] [2] அச்சிடப்பட்ட பஞ்சாங்கத்தின் பழைய பதிப்பு 1527 இல் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் செய்யப்பட்டது. 15ஆம் நூற்றாண்டின் முடிவில், அட்டவணைப் புத்தகங்கள் இங்கிலாந்திற்கு இறக்குமதி செய்யப்பட்டன, பின்னர் 1570 களிலிருந்து இவை இலண்டனில் அச்சிடப்பட்டன.
பயன்கள்
தொகுவரைவதற்குப் பொருத்தமான வெற்றுக் காகிதத்தின் பரந்த இடைவெளிகளை உள்ளடக்கிய குறிப்பேடுகளைப் பெரும்பான்மையாக கலைஞர்கள் பயன்படுத்டுகின்றனர். ஓவியம் வரைந்தாலோ அல்லது வேலைப்பாடுகளுடன் கூடிய வேலையினைச் செய்தாலோ தடிமனான காகிதத்தையும் பயன்படுத்தலாம். இயற்கைக்காட்சிகளை வரைவதற்கு அவர்கள் வழக்கமாக எல்லா இடங்களிலும் தங்கள் குறிப்பேடுகளை எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதால் இலகுவான குறிப்பேடுகளையே பெரும்பான்மையாகப் பயன்படுத்துவர். அதேபோல் இசையமைப்பாளர்கள் தங்கள் பாடல் வரிகளை எழுத குறிப்பேடுகளைப் பயன்படுத்துகின்றனர். வழக்குரைஞர்கள் சட்டப் பட்டைகள் எனப்படும் பெரிய குறிப்பேடுகளைப் பயன்படுத்துகின்றனர். இவை மேசைகளில் பயன்படுத்த பொருத்தமானவை.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Stallybrass, P.; Chartier, R.; Mowery, J. F.; Wolfe, H. (Winter 2004). "Hamlet's Tables and the Technologies of Writing in Renaissance England". Shakespeare Quarterly 55 (4): 379–419. doi:10.1353/shq.2005.0035. https://archive.org/details/sim_shakespeare-quarterly_winter-2004_55_4/page/379.
- ↑ Woudhuysen, H. R. (2004). "Writing-Tables and Table-Books". Electronic British Library Journal. doi:10.23636/924.