குறியறி ஒழுகல்
குறியறி ஒழுகல் அல்லது தூண்டிக்குறிவழி இசைவு (Stigmergy) என்பது நேரடியாக அல்லாமல் நிகழும் ஓர் ஒத்துழைப்புமுறை ஆகும்.[1] ஆங்காங்கே விடப்படும் குறிப்புகளினால் தூண்டப்படும் உயிர்களோ உயிரற்று இயங்குபவைகளோ ஒத்திசைவாக பணிபுரிந்து முன்கூட்டியே திட்டமிடாதவற்றை எட்டுவது இம்முறை. இதில் பணியின் ஒரு பகுதி முடிந்ததும் சுற்றுப்புறத்தில் விடப்படும் குறிப்புகளால் உந்தப்பட்டு அதே இயங்கியோ வேறோர் இயங்கியோ அடுத்தகட்டப்பணியைத் தானாக மேற்கொள்ளும். இவற்றுக்கிடையே வேறு எந்த தொடர்பாடலும் இருக்க வேண்டியதில்லை. மேலிருந்து கட்டளைகளோ குறிக்கீடுகளோ வழிகாட்டல்களோ இருக்காது.
இது ஒருவகையான தன்னாட்சிமுறை எனலாம். இதன்வழியாக எவ் இயங்கிக்கும் முழு பார்வை இல்லாதவிடத்திலும், யாரும் நெறிப்படுத்த வேண்டிய தேவையில்லாமல் பலக்கிய பணிகள் நிறைவடையக்கூடும். சிலவேளைகளில் பங்காற்றும் உயிரினங்களும் வேறு நிரல்சார் இயங்கியோ மிக அடிப்படையான அளவு அறிவும், குறைவான நினைவாற்றலும் மட்டுமே கொண்டிருந்தாலும் ஒரு பலக்கிய சிந்தனை ஆற்றலுடைய இயங்கியின் செயற்பாட்டையொத்த பயனை விளைவிக்கலாம்.[1]
வரலாறு
தொகுமுதன்முதலாக 1959-ஆம் ஆண்டு பிரான்சிய உயிரியலாளர் பியரி பால் கிராசே என்பார் கறையான்கள் புற்று கட்டுவதிலிருந்து பல பணிகளை திட்டமிடாமல் மேற்கொள்வதைக் குறிப்பதற்காக stigmergy எனும் சொல்லை உருவாக்கினார். ஏற்கனவே நிறைவுற்ற பணிகளினால் உந்தப்பட்டு அடுத்தகட்ட பணிகளை தானாக மேற்கொளல் என அச்சொல்லுக்கு வரையறை வகுத்தார். ஓர் இயங்கியின் செயல்பாடு தக்க குறியீடுகளை விட்டுவிடுவதையொட்டி அதே இயங்கியோ மற்றோர் இயங்கியோ அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்வதைக் குறிக்கவே அச்சொல் பயன்பட்டது.[2] இம்முறை மந்தையறிவு போன்றவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.[3]
உயிரினங்கள்
தொகுஎறும்புகள் உணவைத்தேடி அலையும்போது சில மணமிகளை இட்டுக்கொண்டே செல்கின்றன. தொடர்ந்து உணவு கிடைக்கும் தடங்களில் அதிகமான எறும்புகள் ஊர்ந்து செல்வதால் சில தடங்கள் வலுப்பெறுகின்றன. எந்தவொரு தனி எறும்பும் திட்டமிடாமலேயே அவ் எறும்புக்கூட்டத்துக்குத் தேவையான வழித்தடங்கள் இவ்வாறு அமைந்துவிடுகின்றன. இதைப்போலவே கறையான்களும் தாம் சுமந்துவரும் களிமண் உருண்டைகளில் சில மணமிகளை இட்டுவிடுகின்றன. அவற்றால் ஈர்க்கப்படும் பிற கறையாண்கள் அவற்றின்மீது தொடர்ந்து களிமண்ணைக் கொட்டுகின்றன. ஆங்காங்கே தொடங்கும் இப்பணி தொடர்ந்து தூண்கள், வளைவுகள், புழைகள், அறைகள் என பெரிய கட்டுமானமுள்ள புற்றாக நிறைவடைகிறது.[4]
தூண்டிக்குறிகள் வழியமைந்த ஒத்திசைவு பாக்டீரியாக்களிலும் காணப்படுகிறது. சில வேளைகளில் தனித்தனி பாக்சீரியாக்கள் இடத்துக்கும் நேரத்துக்கும் ஏற்றாற்போல உருமாறி தகவமைப்புப் பெறுவது இவ்விளைவினால் நடக்கிறது.[5] ஒட்டுண்ணிகளாக வாழும் சிலவகை அணுச்சுவர் பாக்டீரியாக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதன் வாயிலாக தாம் சார்ந்திருக்கும் ஓம்புயிர் அணுக்களின் உறுப்புக்களைக் கரைக்கும் சுரப்பிகளைப் பெருக்குகின்றன. உணவுப்பற்றாக்குறை ஏற்படும்போது பழம்போல அமைப்பை உருவாக்கி உள்ளுக்குள் தமது அணுக்களை பிற்பாடு ஏவுவதற்காக பாதுகாக்கின்றன.[6]
சமூகம்
தொகுவிக்கிப்பீடியா போன்ற பல தன்னார்வத்திட்டங்களில் சிறுசிறு திருத்தங்கள், விரிவாக்கங்கள், சான்று சேர்த்தல், படங்களைச் சேர்த்தல் என பங்களிப்பாளர்கள் எந்தவொரு நடுவமும் தேவைப்படாமல் நிறைவடையாத பணிகளின் அடையாளமான கட்டுரைகளைச் சுற்றி பணியாற்றி வளர்ப்பது இவ்விசைவுமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இதையொட்டிய தன்னாட்சி முறைகளும் முன்வைக்கப்படுகின்றன.
தானிகள்
தொகுதானியங்கிகள் தனித்தனியாகச் செயல்பட்டாலும் பணிகளைக் கூட்டாக மேற்கொள்வதற்காக அவ்வறை இந்தமுறையில் ஒத்துழைக்கும்படி வடிவமைப்பதுண்டு.[7] எறும்புகள் தம் கூட்டிலிருந்து உணவு இருக்குமிடங்களுக்கு ஏற்படுத்தும் வலைத்தடத்தைப் போன்று வழிதேடும் நிரல்களையும் வடிவமைக்கலாம் எனக் காட்டப்பட்டுள்ளது.[8][9]
இவற்றையும் பார்க்கவும்
தொகுகுறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ 1.0 1.1 Marsh, L. & Onof, C. (2007) "Stigmergic epistemology, stigmergic cognition." Cognitive Systems Research / doi: 10.1016/j.cogsys.2007.06.009
- ↑ Bonabeau, E. "Editor's Introduction: Stigmergy." Special issue of Artificial Life on Stigmergy. Volume 5, Issue 2 / Spring 1999, p.95-96.
- ↑ Parunak, H. v D. (2003). "Making swarming happen." பரணிடப்பட்டது 2014-11-12 at the வந்தவழி இயந்திரம் In Proc. of Conf. on Swarming and Network Enabled Command, Control, Communications, Computers, Intelligence, Surveillance and Reconnaissance (C4ISR), McLean, Virginia, USA, January 2003.
- ↑ Beckers, R., Holland, O. E. and Deneubourg, J.L. "From local actions to global tasks: Stigmergy and collective robotics." பரணிடப்பட்டது 2013-11-04 at the வந்தவழி இயந்திரம் Artificial life IV. 1994, p.181-189.
- ↑ Shapiro, James A. (June 1988). "Bacteria as Multicellular Organisms". Scientific American 258 (6): 82–89. doi:10.1038/scientificamerican0688-82. http://shapiro.bsd.uchicago.edu/Shapiro.1988.scientificamerican0688-82.pdf. பார்த்த நாள்: 8 September 2013.
- ↑ Dworkin, Martin (2007). "Lingering Puzzles about Myxobacteria". Microbe 2 (1): 18–23. http://forms.asm.org/ASM/files/ccLibraryFiles/Filename/000000002764/znw00107000018.pdf. பார்த்த நாள்: 11 September 2013.
- ↑ Ranjbar-Sahraei, B., Weiss G., and Nakisaee, A. (2012). A Multi-Robot Coverage Approach based on Stigmergic Communication. In Proc. of the 10th German Conference on Multiagent System Technologies, Vol. 7598, pp. 126-138.
- ↑ A. Colorni, M. Dorigo et V. Maniezzo, Distributed Optimization by Ant Colonies, actes de la première conférence européenne sur la vie artificielle, Paris, France, Elsevier Publishing, 134-142, 1991.
- ↑ M. Dorigo, Optimization, Learning and Natural Algorithms, PhD thesis, Politecnico di Milano, Italy, 1992.
வெளி இணைப்புகள்
தொகு- Ant Colony Optimization Home Page பரணிடப்பட்டது 2013-10-11 at the வந்தவழி இயந்திரம்
- "Ant Colony Optimization" - Russian scientific and research community
- AntSim - Simulation of Ant Colony Algorithms பரணிடப்பட்டது 2008-06-16 at the வந்தவழி இயந்திரம்
- MIDACO-Solver General purpose optimization software based on ant colony optimization (Matlab, Excel, C/C++, R, Fortran and Python)
- University of Kaiserslautern, Germany, AG Wehn: Ant Colony Optimization Applet பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம் Visualization of Traveling Salesman solved by ant system with numerous options and parameters (Java Applet)
- Ant Farm Simulator
- Ant algorithm simulation (Java Applet)