குறும்பர் ஓவியங்கள்
குறும்பர் ஓவியங்கள் என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் வாழும் மலைவாசி மக்களான குறும்பர் இனமக்கள் வரையும் ஓவியங்களாகும். குகைகளிலும், மலைப் பாறைகளிலும் வரைந்துவந்த ஆதிவாசிகளின் பழக்கம் தொடர்ந்துகொண்டே வந்து, பின்னர் கோயில் திருவிழா, பண்டிகைகளின்போது வீட்டுச் சுவர்களில் வரையக்கூடியதாக ஆனது.
இந்த ஓவியங்கள் கொவைக்கல், கும்பதேவா, தேன் எடுத்தல், திருமணம், கொவை மனை, கெதேவா, திருவிழா என குறும்பர் பழங்குடியின மக்களின் வாழ்வியலைப் பேசுபவையாக உள்ளன. இவர்கள் தங்கள் ஓவியங்களை வரைய இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்துகின்றனர். ஓவியங்களுக்கு பயன்படுத்தும் வண்ணத்தை, வேங்கை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பிசினைக் கொண்டு தயாரிக்கின்றனர். இந்த பிசினை பதப்படுத்தி தண்ணீர் சேர்த்து பழுப்பு வண்ணத்தை உருவாக்குகின்றனர். இவர்களின் பெரும்பாலான ஓவியங்கள் பழுப்பு நிறத்திலானவை. இலைகளின் பச்சை நிறத்துக்காக சில இலைகளையே பிழிந்து சாறெடுத்து பயன்படுத்துகின்றனர்.[1] தற்போது இந்த ஓவியங்களை கேன்வாசிலும் வரைந்து ஓவியக்கண்காட்சி வழியாக விற்பனை செய்கின்றனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ ஆர்.டி.சிவசங்கர் (15 சூன் 2018). "இயற்கை வண்ண குறும்பர் ஓவியங்கள்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2018.
- ↑ பாலு சத்யா (18 செப்டம்பர் 2013). "குறும்பர் வாழ்வு… பேசும் ஓவியங்கள்!". கட்டுரை. குங்குமம் தோழி. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help)