குறும்பர்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
வகைப்படுத்தல்: | குறும்ப இடையர், குறும்பர்,குறுமர் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை: | வட இந்தியா, மேற்கு இந்தியா, தென்னிந்தியா மற்றும் மத்திய இந்தியா | |
மொழி | தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் | |
சமயம் | இந்து |
குறும்பர் (Kurumbar/kurumbas-Nilgiris) எனப்படுவோர் தென்னிந்தியாவில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் ஆடு மேய்ப்பவர்களாக உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.[1]
குறும்பு என்றால் காடு என்று பொருள். காடும் காடு சார்ந்த பகுதியில் வாழ்ந்த முல்லை நில மக்களான இவர்கள் .மேற்கு தொடர்ச்சி மலை வழியாக ஆந்திரா, கருநாடகா மற்றும் பல மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர். இவர்கள் பல பெயர்களில் அறியப்பட்டாலும் அவை ஒரே பொருளைக் குறிப்பவை. இவர்களது கடவுளாக வீரபத்திரரை (பீரா தேவரு) வழிபடுகின்றனர். இவர்களது சாதிப்பெயர்கள் குறும்ப இடையர், கௌடர், ஹெக்கடே, நாயக்கர் என்பன ஆகும். இந்தியாவின் பிற பகுதிகளில் இவர்கள் தங்கர் என அறியப்படுகின்றனர்.[சான்று தேவை]