குறையடர்த்தி கொழுமியப்புரதம்
குறையடர்த்தி கொழுமியப்புரதம் (Low density lipoprotein; LDL) ஐந்து பெரும் கொழுமியப்புரதத் தொகுப்புகளுள் ஒன்றாகும். கொழுமியப்புரதத் தொகுப்புகளை பெரிய அளவுகளிலிருந்து சிறிய அளவிற்கு பின்வறுமாறு வரிசைப்படுத்தலாம்: கைலோமைக்ரான்கள், மிகு-குறையடர்த்தி கொழுமியப்புரதம் (VLDL), இடைநிலையடர்த்தி கொழுமியப்புரதம் (IDL), குறையடர்த்தி கொழுமியப்புரதம் (LDL) மற்றும் உயரடர்த்தி கொழுமியப்புரதம் (HDL). இப்புரதங்கள், பல்வேறு கொழுப்பு மூலக்கூறுகளை (கொலஸ்டிராலையும் சேர்த்து) செல்களை சூழ்ந்த நீரில், நீர்-அடிப்படையினைக் கொண்ட இரத்த ஓட்டத்தில் பெயர்ச்சி செய்ய துணை செய்கிறது. அதிக அளவு குறையடர்த்தி கொழுமியப்புரத-பி வகை பொருள்கள் (குறையடர்த்தி கொழுமியப்புரத-எ வகை பொருள்களைப் போலல்லாது) இதயக் குழலிய நோயையும், உடல்நல சீர்கேடுகளையும் ஊக்குவிப்பதால், சாதரணமாக [நன்மையான (அ) ஆரோக்கியமான கொலஸ்டிரால் பொருள்களான உயரடர்த்தி கொழுமியப்புரதங்களை போலல்லாது] தீய கொலஸ்டிரால் பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன[1].