குற்றாலம் அரண்மனை
குத்தாலம் அரண்மனை அல்லது குற்றாலம் அரண்மனை (Kuttalam Palace) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தின் (பழைய திருநெல்வேலி மாவட்டம் ) குற்றாலம் கிராமத்தில் அமைந்துள்ள அரண்மனை ஆகும். இது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முக்கியமான அரண்மனைகளில் ஒன்றாகும்.[1] கேரள தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அரண்மனையினை தொல்பொருள் துறையே பராமரித்து வருகின்றது. இது மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குற்றாலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையினை விசாகம் திருநாள் மன்னர் 1882 இல் கட்டினார். அரண்மனை மற்றும் விருந்தினர் மாளிகை சுமார் 56.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் அருகில் அமைந்துள்ள முக்கியமான இடம் குற்றாலம் அருவியாகும்.
1956க்கு முன்னர் இந்த பகுதிகள் திருவாங்கூர் அரசின் கீழ் இருந்தன. திருவாங்கூர் அரசின் கொல்லம் மாவட்டத்தில் செங்கோட்டைத் வட்டத்தில் குற்றாலம் மற்றும் செங்கோட்டையும், ஆரியங்காவு பஞ்சாயத்தும் இருந்தன. 1956ல் ஆரியங்காவு பஞ்சாயத்து கேரளா மாநிலத்தின் கீழ் இணைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mathrubhumi - Abandoned Palace". Archived from the original on 2018-02-10. பார்க்கப்பட்ட நாள் 2020-09-25.