குலாப்சந்த் இராசந்த்

குலாப்சந்த் இராச்சந்த் தோசி (1898-1967) இவர் வால்சந்த் குழுமத்தின் வாரிசும், பிரபல தொழிலதிபரும், அறக்காரியங்களை செய்தவரும், தேசியவாதியுமாவார். [1]

பின்னணிதொகு

இராச்சந்த் தோசியின் இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறந்த மகனும், வால்சந்த் இராசந்த்தின் சகோதரருமாவார். இவர் மகாராட்டிராவின் சோலாப்பூரில் குசராத்தி சமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர்கள் முதலில் குசராத்தில் வான்கானேர் நகரைச் சேர்ந்தவர்கள். [2] [3] இலால்சந்த் இராச்சந்த், ரத்தன்சந்த் இராச்சந்த் ஆகிய இருவரும் இவரது சகோதரர்களாவர்.

செயற்பாட்டாளர்தொகு

இவர், 1944-1945 ஆண்டுகளில் மகாராட்டிரா இந்து சபையின் தலைவராகவும், வீர் சாவர்க்கரின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்தார். 1930களில், இவர் தனது தேசியவாத நடவடிக்கைகளுக்காக பிரித்தானிய அரசால் கைது செய்யப்பட்டார். [1] [4]

வால்ச்சந்த்நகர் தொழில் நிறுவனங்கள்தொகு

முதன்மைக் குழு நிறுவனமான வால்ச்சந்த்நகர் தொழில் நிறுவனத்தின் நவீனமயமாக்கலுக்கும், மாற்றத்திற்கும் இவர் பொறுப்பேற்றார். [5] [6]

குடும்பம்தொகு

இவரது இரண்டு திருமணங்களிலிருந்து பல மகன்கள் பிறந்தனர். அவற்றில் பாகுபலி குலாப்சந்த் [6] என்பவரும் அஜித் குலாப்சந்த் என்பவரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும் அஜித் இப்போது முதன்மை குழு, எச்.சி.சி நிறுவனம் உள்ளிட்ட பல குழு நிறுவனங்களுக்கு தலைமை தாங்குகிறார். [7] [8] மற்ற முதன்மை நிறுவனமான வால்ச்சந்த்நகர் தொழில்நிறுவனங்கள் இப்போது இவரது சகோதரர் லால்சந்த் இராச்சந்தின் மகன்களால் நடத்தப்படுகிறது. குடும்பங்களின் வணிகப் பிரிவுக்குப் பிறகு, வால்சந்த் குழுமத்தின் நிறுவனர் வால்சந்த் இராச்சந்த் எந்த வாரிசுகளும் இல்லாமல் இறந்தார். [9]

பிற படைப்புகள்தொகு

வால்சந்த் குழுமத்தால் நடத்தப்படும் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் அறங்காவலராக இவர் இருந்தார். [10]

மேலும், குந்தா-குந்தா பிரபிருத சங்கிரகா போன்ற சமண மதத்தைப் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார். [11]

மேற்கோள்கள்தொகு