குலாப் பாய்

இந்திய நாடக நடிகை

குலாப் பாய் (Gulab Bai) (1926–1996), பிரபலமாக குலாப் ஜான் என்று அழைக்கப்படும் இவர், ஓர் இந்திய நாடக நடிகையாவார். நௌதாங்கி [1] என்கிற பாரம்பரிய இயக்க நாடகத்தின் முதல் பெண் கலைஞர் மற்றும் அதன் நிபுணராக பலராலும் கருதப்பட்டார்.[2] இவர், வெற்றிகரமான நௌடாங்கி குழுவான கிரேட் குலாப் தியேட்டர் என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.[3] 1990 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[4]

ஒரு நௌதாங்கி நிகழ்ச்சி

சுயசரிதை தொகு

குலாப் பாய் 1926 ஆம் ஆண்டில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரூக்காபாத் மாவட்டத்திலுள்ள பால்பூர்வாவில் பெடியா சாதியில் பிறந்தார். இது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தும் ஒரு பின்தங்கிய சமூகமாகும்.[1][5] கான்பூர் கரானாவின் உஸ்தாத் திரிமோகன் லால் மற்றும் 1931 ஆம் ஆண்டில் ஹத்ராஸ் கரானாவின் உஸ்தாத் முகமது கான் ஆகியோரின் கீழ் பாடலில் முறையான பயிற்சியைத் தொடங்கினார். மேலும் பதின்மூன்று வயதில் திரிமோகன் லாலின் நௌதாங்கி குழுவில் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளை நிகழ்த்தத் தொடங்கினார். இவர் கலை வடிவத்தின் முதல் பெண் கலைஞரானார். இவர் ஒரு தனிப்பட்ட பாணியை உருவாக்கினார். இது குபா ஜான் என்ற புனைபெயரைப் பெற்றது.

இவரது வளர்ந்து வரும் புகழ் இவருக்கு சொந்தமாக ஒரு நௌதாங்கி குழுவான கிரேட் குலாப் தியேட்டர் என்ற நிறுவனத்தை நிறுவ உதவியது.[3] நிறுவனம் உடனடியாக வெற்றி பெற்றது என்று கூறப்பட்டது. நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பு இவரது வளர்ந்து வரும் வயது ஆகியவை 1960 களில் இவரது சொந்த நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தும்படி கட்டாயப்படுத்தியது.[2] மேலும் இவர் தனது சிறிய சகோதரி சுக்பாதனை, பிற்காலத்தில் நந்தா குஹா என்ற பெயரில் ஒரு முன்னணி நடிகையாக வளர்த்துக் கொண்டார். இவர் பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிடத்தக்க நடிகையாக இருந்தார்.[3] இவரது மகள் மதுவும் ஒரு பிரபலமான நடிகையாவார். தனது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதி ஒரு கலை வடிவமான நௌதாங்கி கலையால் படிப்படியாகக் குறைந்தது.[5]

இவருக்கு, 1990 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதை இந்திய அரசு வழங்கி கௌரவித்தது.[4] ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் தனது 70ஆவது வயதில் இறந்தார்.[1] இவரது வாழ்க்கை வரலாறு தீப்தி பிரியா மெஹ்ரோத்ரா என்பவரால் ஆவணப்படுத்தப்பட்டது. இது, குலாப் பாய்: நௌதாங்கி அரங்கின் ராணி என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை பெங்குயின் இந்தியா என்ற நிறுவனம் வெளியிட்டது.[6] இவரது வாழ்க்கை கதையும் மே 2014 இல் கான்பூரில் மேடையில் இயற்றப்பட்ட ஒரு நாடகத்தின் கருப்பொருளாக இருந்தது.[7]

நௌதாங்கி தொகு

தெற்காசியாவின், குறிப்பாக வட இந்தியாவில் மிகவும் பிரபலமான நாட்டுப்புற அரங்குகளின் செயல்திறன் வடிவங்களில் நௌதாங்கியும் ஒன்றாகும். பாலிவுட் (இந்தி திரையுலகம்) வருவதற்கு முன்பு, வட இந்தியாவின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் நௌதாங்கி மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தது. நௌதாங்கியின் பணக்கார இசை அமைப்புகளும் நகைச்சுவையான, பொழுதுபோக்கு கதைகளும் கிராமப்புற மக்களின் கற்பனையில் வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளன. வெகுஜன ஊடகங்கள் (தொலைக்காட்சி மற்றும் இசைவட்டுகள் போன்றவை) பரவிய பிறகும், 10,000 முதல் 15,000 பேர் கொண்ட கூட்டத்தை சிறந்த நௌதாங்கி நிகழ்ச்சிகளில் காணலாம். நௌதாங்கியின் தோற்றம் வட இந்தியாவின் சாங்கித், பகத் மற்றும் ஸ்வாங் இசை நாடக மரபுகளில் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Ananda Lal (2004). "Gulab Bai (1926–96)". The Oxford Companion to Indian Theatre. ISBN 978-0-19-564446-3. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
  2. 2.0 2.1 "Dying Drama". Booji. 2015. Archived from the original on 10 May 2012. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
  3. 3.0 3.1 3.2 "Biography Page 179". Rediff. 2015. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.
  4. 4.0 4.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. {{cite web}}: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
  5. 5.0 5.1 "Penguin Books profile". Penguin Books. 2015. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
  6. Deepti Priya Mehrotra (2006). Gulab Bai: The Queen of Nautanki Theatre. Penguin India. பக். 318. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-310043-0. https://books.google.com/books/about/Gulab_Bai.html?id=tjyemJStPpUC&redir_esc=y. 
  7. "Actors and theatre artists watch the play 'Gulab Bai' in Lucknow". Times of India. 12 May 2014. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாப்_பாய்&oldid=3862626" இலிருந்து மீள்விக்கப்பட்டது