குலாம் ஆசன் மிர்

இந்திய அரசியல்வாதி

குலாம் ஆசன் மிர் (Ghulam Hassan Mir) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[2] சம்மு மற்றும் காசுமீர் மாநில அரசியலில் இவர் சம்மு காசுமீர் அப்னி கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[3] சம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். 2002 ஆம் ஆண்டில் சம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சியின் வேட்பாளராக சம்மு மற்றும் காசுமீர் சட்டப் பேரவையின் குல்மார்க் தொகுதிக்கு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குலாம் முகமது சா தலைமையிலான அமைச்சரவையில் இவர் சட்ட அமைச்சராக இருந்தார். முப்தி முகமது சயீத் தலைமையிலான அமைச்சரவையில் 2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார்.[4][5][6] அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தில் இவர் சட்டப் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார்.

குலாம் ஆசன் மிர்
Ghulam Hassan Mir
சம்மு காசுமீர் அரசு அமைச்சர்
பதவியில்
1984-1986, 2002-2006, 2008-2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1950-01-01)1 சனவரி 1950
அரி வாட்டினோ, தாங்மார்க், பாரமுல்லா மாவட்டம், சம்மு காசுமீர் மாநிலம்
அரசியல் கட்சிசம்மு காசுமீர் அப்னி கட்சி[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Jammu And Kashmir Apni Party -JKAP". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-22.
  2. "rediff.com: Sayeed sworn-in as J&K chief minister". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  3. "Former J-K minister resigns from primary membership of PDP". The Siasat Daily (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2020-03-08. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  4. "PDP suspends Ghulam Hassan Mir". www.outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  5. "Delhi encouraging formation of new political party in J&K to digress attention from current political crisis". National Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  6. Scroll Staff. "Kashmir: Two former MLAs released from detention, say reports". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_ஆசன்_மிர்&oldid=3847766" இலிருந்து மீள்விக்கப்பட்டது