தாங்மார்க்
தாங்மார்க் (Tangmarg) என்பது இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் மற்றும் வட்டமுமாகும். 2014ஆம் ஆண்டிலிருந்து, நகரம் அருகிலுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையமாக உள்ளது.
தாங்மார்க் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 34°03′33″N 74°25′28″E / 34.05917°N 74.42444°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | பாரமுல்லா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 193402 |
தொலைபேசி இணைப்பு எண் | +911954 |
குளிர்ந்த நீர், கடுமையான பனிப்பொழிவு மற்றும் சுற்றுலாவுக்கு பிரபலமானது. இது ஒரு மலைப்பாங்கான பகுதி, பெரும்பாலான பகுதிகள் பசுமையான காடுகளால் சூழப்பட்டுள்ளன. இது ஸ்ரீநகரிலிருந்து 39 கி.மீ (24 மைல்) தொலைவிலுள்ளது. குல்மார்க், திரங், பேடர்கூட், ஜான்ட்பால், கோகல்தாரா, நிக்லி நுல்லா மற்றும் பாபா ரேஷி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
நிலவியல்
தொகுதாங்மார்க் நகரம் 75.36679 தீர்க்கரேகையிலும் 33.80405 அட்சரேகையிலும் அமைந்துள்ளது. [1]
அணுகல் மற்றும் போக்குவரத்து
தொகுஸ்ரீநகரிலிருந்து 38 கிமீ (24 மைல்) தொலைவில் தாங்மார்க் அமைந்துள்ளது; சாலை வழியாக பயண நேரம் சுமார் 90 நிமிடங்கள் ஆகும். சிறீநகர் வானூர்தி நிலையம் 49 கி.மீ (30 மைல்) தொலைவில் உள்ளது. குல்பர்க் நர்பல்-தாங்மார்க் சாலையில் 13 கி.மீ (8.1 மைல்) தொலைவில் உள்ளது. நகரத்திற்கு பொதுவான அணுகுமுறை சாலை போக்குவரத்து மட்டுமேயாகும். சிறிநகர், பாரமுல்லா, மாகம், சோப்பூர், குல்மார்க் மற்றும் பட்டன் ஆகிய இடங்களிலிருந்து போக்குவரத்து கிடைக்கிறது.
வரலாறு
தொகுதாங்மார்க்கின் வரலாறு முகலாயக் காலத்திற்கு முந்தையது. இது குல்மார்க்கின் நுழைவாயிலாக பயன்படுத்தப்பட்டது. உள்ளூர் பேச்சுவழக்கில் இருந்து தாங் என்றால் பேரி என்றும் மார்க் என்றால் புல்வெளி என்றும் பொருள். இதனருகே பல பேரிக்காய் மரங்கள் வெவ்வேறு கிராமங்களில் வளர்ந்துக்கிடக்கின்றன.
செப்டம்பர் 13, 2010 அன்று, சிறுபான்மை கல்வி குழு நடத்தும் பள்ளிக்கு கலகக்காரர்கள் தீ வைத்த பின்னர் இந்திய பாதுகாப்புப் படையினரால் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும், குறைந்தது 20 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில்திருக்குர்ஆனை இழிவுபடுத்துவது பற்றிய தொலைக்காட்சி அறிக்கையின் பின்னர் இந்த கலவரம் நிகழ்ந்தது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://indiamapia.com › Baramulla Tangmarg Pin Code, Tangmarg, Baramulla Map, Latitude and ...
- ↑ "17 Killed, Over 70 Injured in Fresh Violence in Kashmir". அவுட்லுக் (இதழ்). 13 September 2010. https://www.outlookindia.com/newswire/story/17-killed-over-70-injured-in-fresh-violence-in-kashmir/693252.