குல்செக்ரா ஹோஜா
குல்செக்ரா குலி ஏ. ஹோஜா ( Gulchehra "Guli" A. Hoja ) (பிறப்பு 1973) ஒரு உய்குர்-அமெரிக்க பத்திரிகையாளர் ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் ரேடியோ ஃப்ரீ ஏசியாவில் பணியாற்றி வருகிறார்.[1][2][3] நவம்பர் 2019 இல், சின்சியாங்கில் நடந்து வரும் மனித உரிமைகள் நெருக்கடியைப் பற்றி அறிக்கை செய்ததற்காக மேக்னிட்ஸ்கி மனித உரிமைகள் விருதைப் பெற்றார்.[4] மேலும் 2020 இல், சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளையின் [5] தைரியமான பத்திரிகையாளருக்கான விருதைப் பெற்றார் . மேலும் 2020 ஆம் ஆண்டில், "மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்கள்" பட்டியலில் இடம்பெற்றார்.[6]
குல்செக்ரா ஹோஜா | |
---|---|
பிறப்பு | 1973 உருமுச்சி, சின்சியாங், சீன மக்கள் குடியரசு |
குடியுரிமை | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
கல்வி | உய்குர் மொழியிலும், இலக்கியத்திலும் இளங்கலைப் பட்டம் |
அறியப்படுவது | ரேடியோ பிரீ ஆசியாவின் ஊடகவியலாளர் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகுல்செக்ரா, 1973 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் சின்சியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியின் தலைநகரான உருமுச்சியில் பிறந்தார்.[3] இவரது தந்தை சின்சியாங் பிராந்திய அருங்காட்சியகத்தின் தொல்லியல் துறையின் தலைவராக பணியாற்றிய ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரும் தொல்லியல் ஆராய்ச்சியாளரும் ஆவார்.[3][7] இவரது எழுத்து உய்குர் மொழியிலும் வரலாற்றிலும் கவனம் செலுத்தியது. இவரது தொல்பொருள் பணிகளில் தாரிம் படுகையில் காணப்படும் மம்மிகள் பற்றிய களப்பணிகளும் அடங்கும்.[3][7] இவரது தாயார் மருந்தியல் பேராசிரியராகவும் மருந்தாளுநராகவும் பணியாற்றினார்.[3] இவருக்கு இளைய சகோதரர் இருக்கிறார்.[3] இவரது தாத்தா பாரம்பரிய உய்குர் இசையின் பரவலாக அறியப்பட்ட இசையமைப்பாளர் ஆவார்.[3][7]
வளர்ந்து வரும் போது, இன உய்குர்களால் நடத்தப்படும் உய்குர் மொழிப் பள்ளிகளில் பயின்றார்.[3] சின்சியாங் நார்மல் பல்கலைக்கழகத்தில் உய்குர் மொழியிலும் இலக்கியத்திலும் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1]
சீன அரசு ஊடகம்
தொகுகல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, சீனாவில் முதல் உய்குர் மொழி குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஆனார். இவரது பாத்திரத்தின் விளைவாக சின்சியாங் முழுவதும் நன்கு அறியப்பட்டார்.[7] சின்சியாங் தொலைக்காட்சி [8][9] மற்றும் சீனா மத்திய தொலைக்காட்சி .[3] போன்ற சீன அரசு ஊடகங்களில் பணிபுரிந்தார்.[10]
சீனாவை விட்டு வெளியேறுதல்
தொகுமுதலில் சீன அரசு ஊடகங்களுடனான தனது பணியிலும் அரசு உய்குர் மக்களை நடத்துவதில் சங்கடத்தை உணர்ந்தார். உய்குர் குழந்தைகளை அவர்களின் வீடு மற்றும் கிராமங்களில் இருந்து "பிரதான" சீனாவில் வளர்க்க அழைத்துச் செல்லப்பட்டதைப் பற்றிச் சென்று அறிக்கை செய்தார்.[11]
2001 இல், ஆஸ்திரியாவில் விடுமுறையில் இருந்தபோது, முதன்முறையாக இணையத்தை அணுகி, சீனாவிற்கு வெளியே உய்குர் ஆர்வலர்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்து கொண்டார்.[7] ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இருந்தபோது, சீன அரசு ஊடகத்திற்கான தனது பணிக்காக வெட்கப்பட்ட சீனாவுக்குத் திரும்ப வேண்டாம் என்று முடிவு செய்தார்.[3][7] அந்த ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து ரேடியோ ஃப்ரீ ஏசியாவில் பணியாற்றத் தொடங்கினார். அதில் சீன அரசாங்கத்தால் உய்குர் மக்கள் மீதான அடக்குமுறையைப் பற்றி அறிக்கை செய்தார்.[3]
2017 ஆம் ஆண்டில், ஹோஜா சீன அரசாங்கத்தால் பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். இவரது அறிக்கையின் காரணமாக இவரது சகோதரரும் இந்த நேரத்தில் கைது செய்யப்பட்டு சின்சியாங் தடுப்பு முகாம் ஒன்றில் வைக்கப்பட்டார்.[11]
ஜனவரி 28, 2018 அன்று, அவர் சின்சியாங்கில் உள்ள தனது பெற்றோரைப் பார்க்கச் சென்றபோது "பயங்கரவாத நடவடிக்கைகள்" என்று கைது செய்யப்பட்ட ஓமுர்பெக் எலியின் நேர்காணலை வெளியிட்டார். எலி சின்சியாங் தடுப்பு முகாம் ஒன்றில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.[12] மூன்று நாட்களுக்குப் பிறகு ஜனவரி 31 அன்று, ஹோஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த இருபத்தைந்து உறுப்பினர்கள் சின்சியாங்கில் உள்ள உள்ளூர் காவல் நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.[11]
ஏப்ரல் 2021 இல், இவரது தாய் மற்றும் சகோதரரின் காணொள்கள் வெளியிடப்பட்டன. அதில் அவர்கள் சாதாரண வாழ்க்கையை நடத்துவதாகக் கூறி, இவரது அறிக்கையை விமர்சித்தனர்.[13]
மார்ச் 27, 2019 அன்று, சின்சியாங் தடுப்பு முகாம்களில் உள்ள குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட நபர்களின் பிரதிநிதியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோவை ஹோஜா சந்தித்தார்.[14][15]
பாராட்டுகள்
தொகுநவம்பர் 2019 இல், சின்சியாங்கில் நடந்து வரும் மனித உரிமைகள் நெருக்கடி குறித்து அறிக்கை செய்ததற்காக ஹோஜா மேக்னிட்ஸ்கி மனித உரிமைகள் விருதைப் பெற்றார்.[4] 2020 ஆம் ஆண்டில், மிகவும் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்களில் ஹோஜா பட்டியலிடப்பட்டார்.[6]
2020 இல், ஹோஜா சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளையின் தைரியமான பத்திரிகையாளருக்கான விருதைப் பெற்றார்.[5]
சொந்த வாழ்க்கை
தொகுஹோஜா தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வர்ஜீனியாவின் உட்பிரிட்ஜில் வசித்து வருகிறார்.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Gulchehra A. Hoja Biography" (PDF). US House of Representatives. Archived (PDF) from the original on 2019-12-11. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
- ↑ Srinivas Mazumdaru (March 5, 2018). "Uighur journalist Gulchehra Hoja: 'I have my own sad story to tell'". Deutsche Welle. Archived from the original on June 14, 2020. பார்க்கப்பட்ட நாள் October 13, 2020.
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 Nordlinger, Jay (May 4, 2021). "A Uyghur Daughter, and Journalist". National Review. https://www.nationalreview.com/2021/05/a-uyghur-daughter-and-journalist/.
- ↑ 4.0 4.1 "Radio Free Asia Uyghur journalist wins Magnitsky Human Rights Award". United States Agency for Global Media. November 15, 2019 இம் மூலத்தில் இருந்து 2019-12-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191211030814/https://www.usagm.gov/2019/11/15/radio-free-asia-uyghur-journalist-wins-magnitsky-human-rights-award/. பார்த்த நாள்: 2019-12-11.
- ↑ 5.0 5.1 "Gulchehra Hoja". Archived from the original on August 6, 2020. பார்க்கப்பட்ட நாள் October 13, 2020.
- ↑ 6.0 6.1 "Gulchehra Hoja". The 500 Most Influential Muslims. Archived from the original on October 13, 2020. பார்க்கப்பட்ட நாள் October 13, 2020.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 Greenberg, Ilan (June 23, 2021). "How China threatens prominent Uyghurs — in the US, in China and everywhere". Coda Story. https://www.codastory.com/disinformation/uyghur-journalist-retaliation/.
- ↑ "HANKEZI ZIKELI AUNT OF US-BASED UYGHUR JOURNALIST GULCHEHRA HOJA – CHINA AT RISK OF TORTURE". பன்னாட்டு மன்னிப்பு அவை. Archived from the original on February 23, 2020. பார்க்கப்பட்ட நாள் October 13, 2020.
Gulchehra Hoja's aunt, Hankezi Zikeli, is detained in a "transformation-through-education" centrer in Urumqi, Xinjiang, and is believed to have suffered a nervous breakdown. She is one of 25 relatives of Gulchehra Hoja who have been detained since January 2018.
- ↑ Andrew McCormick (March 1, 2019). "What It's Like to Report on Rights Abuses Against Your Own Family". The Atlantic. Archived from the original on September 12, 2020. பார்க்கப்பட்ட நாள் October 13, 2019.
- ↑ "Gulchehra A. Hoja Biography" (PDF). ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை. Archived from the original (PDF) on 2019-12-11. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
- ↑ 11.0 11.1 11.2 Nordlinger, Jay (May 17, 2021). "'Be a Human': A Uyghur-American journalist, working for Radio Free Asia". National Review. https://www.nationalreview.com/magazine/2021/05/17/be-a-human/.
- ↑ Hoja, Gulchehra (January 30, 2018). "Interview: 'I Lost All Hope of Surviving'". Radio Free Asia.
- ↑ "新疆维吾尔自治区在京第7场涉疆问题新闻发布会实录 视频震撼". zj.zjol.com.cn. Archived from the original on 2023-02-20. பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
- ↑ 罗伯特·帕拉迪诺 (March 28, 2019). "国务卿蓬佩奥与维吾尔族穆斯林的会见". U.S. Embassy & Consulates in China 美国驻中国大使馆及领事馆 இம் மூலத்தில் இருந்து 2019-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190713183713/https://china.usembassy-china.org.cn/zh/secretary-pompeos-meeting-with-uighur-muslims-impacted-by-human-rights-crisis-in-xinjiang/. பார்த்த நாள்: 2019-12-11.
- ↑ Fred Hiatt (December 1, 2019). "These journalists have confounded China's massive propaganda machine". https://www.washingtonpost.com/opinions/global-opinions/china-is-harassing-journalists-reporting-on-uighurs-they-cannot-be-stifled/2019/12/01/18ada52c-1148-11ea-b0fc-62cc38411ebb_story.html. பார்த்த நாள்: October 13, 2020.
வெளி இணைப்புகள்
தொகு- Gulchehra Hoja on Twitter
- Inside China’s Re-education Camps (interview with Foreign Policy, 2018)
- Gulchehra Hoja: "They’re destroying all my memory" (Women in the World, 2019)
- China’s Uighurs, With Gulchehra Hoja (interview with Council on Foreign Relations, 2020)