குல்தீப் நய்யார்

குல்தீப் நய்யார் (14 ஆகத்து 1923 - 23 ஆகத்து 2018) இந்தியாவின் குறிப்பிடத்தக்க பத்திரிக்கையாளர் மற்றும் சிண்டிகேட்டட் கட்டுரையாளர். இடதுசாரிப் பார்வை கொண்ட அரசியல் விமர்சகர்.

குல்தீப் நய்யார்
Kuldip Nayar-2.jpg
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை [1]
பதவியில்
1997–2003
தொகுதி நியமிப்பு
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 14, 1923(1923-08-14)
சியால்கோட், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
(தற்கால பஞ்சாப், பாக்கித்தான்)
இறப்பு 23 ஆகத்து 2018(2018-08-23) (அகவை 95)
தேசியம் இந்தியர்
கல்வி மெடில் இதழியல் பள்ளி
பணி விரகர், இதழாளர், எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,தூதர்
சமயம் இந்து

துவக்கக் கால வாழ்க்கைதொகு

நய்யார் சியால்கோட்டில் 14 ஆகஸ்ட் 1923 அன்று பிறந்தார். இவருடைய பெற்றோர் குர்பாக்சு சிங் மற்றும் பூரன் தேவி ஆவர். இவர் துவக்கக் கல்வியை சியால்கோட்டிலுள்ள கன்டா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இவர் சியால்கோட்டிலுள்ள முர்ரே கல்லூரியிலும், அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள மெடில் இதழியல் கல்லூரிகளிலும் பயின்றார்.[2] புதுதில்லியில் தங்கியிருந்த காலத்தில், மக்களவை உறுப்பினரான மௌலானா ஹஸ்ரத் மொஹானியைச் சந்தித்தார். அவர், குல்தீப்பை ஆங்கிலத்தில் எழுத தூண்டினார்; உருது பத்திரிக்கையாளராக இருப்பதில் பயனில்லை, ஆகவே ஆங்கிலத்தில் பணியைத் தொடர வற்புறுத்தினார்.

தொழில் வாழ்க்கைதொகு

குல்தீப் நய்யார் உருது பத்திரிக்கையாளராக தன் பணியைத் துவக்கினார். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும், ஐ.நா அவையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.

நூல் விவரத் தொகுப்புதொகு

குல்தீப் நய்யார் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். 'எல்லைகளுக்கு இடையே', 'தூரத்து உறவினர்கள்:துணைக் கண்டத்தின் கதை', 'நேருவுக்குப் பிறகு இந்தியா' மற்றும் 'ஸ்கூப்' போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள்.

ஆதாரங்கள்தொகு

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003". மாநிலங்களவை. பார்த்த நாள் 23 August 2018.
  2. "Hall of Achievement: Kuldip Nayar". பார்த்த நாள் 14 January 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்தீப்_நய்யார்&oldid=2888785" இருந்து மீள்விக்கப்பட்டது