குளித்தலை திருப்பதி சாமிகள் சமாதி கோயில்

திருப்பதி சாமிகள் சமாதி கோயில் என்பது கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சித்தர் ஜீவ சமாதியாகும். இக்கோயில் கடம்பேசுவரர் கோயிலுக்கு அருகேயுள்ளது. இக்கோயில் என்.ஆர்.எம் கோவிந்த கோனார் அவர்களின் உதவியாலும், பக்தர்களின் பொருளுதவியால் மகாகும்பாபிசேகம் 5.11.1970 அன்று நடைபெற்றது. சமாதியின் முன்பு நந்தி சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. அருகே நவகிரகங்கள் உள்ளன. சிவாகம முறைப்படி கோயில் எழுப்பபட்டுள்ளதால் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா சிலைகள் உள்ளன. கோயில் கோபுரத்தில் சித்தர் திருப்பதி சாமிகளின் சுதை சிற்பமும், இந்து சமய கடவுள்கள் மற்றும் இறை அடியார்களின் சுதைச் சிற்பங்கள் உள்ளன.

திருப்பதி சாமிகள் ஜீவசமாதி கோயில் முகப்பு, குளித்தலை

இவர் ரசவாதம் உள்ளிட்ட பல்வேறு சித்துகளை வாழ்ந்த காலத்தில் செய்து காட்டியுள்ளார். ஏழ்மையில் வாடிவர்களுக்கு மணலை அள்ளித் தந்தால், அவர்கள் வீட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது தங்கமணலாக அவை மாறியிருக்குமாம். ஒரு முறை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கையில் இவரும் அவர்களுடன் சேர்ந்து விளையாடியுள்ளார். அப்போது தன்னை ஒரு குழியைத் தோண்டி புதைக்கும் படி செய்து, சில அடிகள் தள்ளி எழுந்து சென்றுள்ளார். இவர் ஓடும் தொடருந்தில் இருந்து அதன் வேகம் குறையாமல் எழுந்துள்ளார்.

படத்தொகுப்பு

தொகு

ஆதாரங்கள்

தொகு