குளிர் (விளையாட்டு)
குளிர் என்பது சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டுக் கருவி.
குளிர் கருவியைச் சுற்றும்போது கடக் கடக் என ஓர் ஓசை உண்டாகும். அது சிறுவர்களுக்கு இன்பம் பயக்கும். சற்று பெரிதான வலிமையான குளிர் தினைப்புனம் காக்கும் மகளிர்க்கு ஓசையால் கிளிகளை விரட்ட உதவும் ஒரு கருவி. சங்க கால மகளிர் தினைப்புனம் காக்கும்போது தினைக்கதிர்களைக் கவர வரும் கிளிகளை ஓட்டக் குளிர் என்னும் கருவியைப் பயன்படுத்தினர். [1]
குளிர் கருவி ஓசை
தொகுகுறிஞ்சிப்பாட்டு நூலில் இந்த இசைக்கருவிப் பற்றிக் குறிப்பிட்ட அதே கபிலர் இந்த இசைக்கருவி எழுப்பும் ஓசை மகளிர் குரல் போல் இருந்தது என்றும், அதன் ஓசையைக் கேட்டுக் கிளிகள் பறந்து ஓடாமல் பாட்டம் பாட்டமாகத் தினைப்புனத்தில் விழுந்தன என்றும், அதனைக் கண்டு தினைப்புனம் காத்த மகள் ஒருத்தி அழுதாள் என்றும் குறிப்பிடுகிறார். [2]
வாழைமட்டையில் சீவங்குச்சி செருகிச் செய்த சிறுவர் விளையாடும் குளிர்
தொகு-
கைப்பிடி
-
சுழலும் கருவி
-
சுழற்றும் பாங்கு
அடிக்குறிப்பு
தொகு- ↑
- கலிகெழு மரமிசைச் சேணோன் இழைத்த
- புலி அஞ்சு இதணம் ஏறி அவண
- சாரல் சூரல் தகைபெற வலந்த
- தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
- கிளிகடி மரபின ஊழ் ஊழ் வாங்கி - குறிஞ்சிப்பாட்டு 40-44
- ↑
சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிளி, அவள் விளி என, விழல் ஒல்லாவே;
அது புலந்து அழுத கண்ணே, சாரல்
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே. (குறுந்தொகை 291)