குளுட்டாகானால்டிகைடு

குளுட்டாகானால்டிகைடு (Glutaconaldehyde) என்பது C5H6O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். குளுட்டரால்டிகைடு மற்றும் குளுட்டகானிக் அமிலம் ஆகியனவற்றுடன் தொடர்புடைய ஒரு நிறைவுறாத டையால்டிகைடு என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. இரட்டைப் பிணைப்புடன் ஒன்றுவிட்டு ஒன்று இணைப்பைக் கொண்டிருப்பதால் இது ஈனால் வடிவில் காணப்படுகிறது. சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு தனிம உப்புகளின் குளுட்டகானால்டிகைடுகள் அறியப்படுகின்றன. பிரிடின் சல்போனேட்டுகளிலிருந்து இவை தொகுக்கப்படுகின்றன [1][2]

குளுட்டாகானால்டிகைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
5-ஐதராக்சி-2,4-பெண்டென்டையினால்
வேறு பெயர்கள்
குளுட்டாகான்டையால்டிகைடு; குளுட்டாகானிக் ஆல்டிகைடு; குளிட்டாகானிக் டையால்டிகைடு; பெண்டென்டையல்
இனங்காட்டிகள்
821-42-1 Y
ChemSpider 4779496 Y
InChI
  • InChI=1S/C5H6O2/c6-4-2-1-3-5-7/h1-6H/b3-1+,4-2+ Y
    Key: WFSXUTWNNVIIIG-ZPUQHVIOSA-N Y
  • InChI=1/C5H6O2/c6-4-2-1-3-5-7/h1-6H/b3-1+,4-2+
    Key: WFSXUTWNNVIIIG-ZPUQHVIOBI
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6011936
  • O=C\C=C\C=C\O
பண்புகள்
C5H6O2
வாய்ப்பாட்டு எடை 98.10 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)
.

குளுட்டாகானால்டிகைடு எதிர்மின் அயனியுடன் அமில குளோரைடுகள் வினைபுரிந்து தொடர்புடைய ஈனால் எசுத்தர்களைக் கொடுக்கின்றன. குளுட்டாகானால்டிகைடை தொடர்புடைய கீழ்கண்டவாறு வினைல் புரோமைடாகவும் மாற்றவியலும்[3].

இவ்விளை பொருட்கள் மின்னணு மிகு பொருட்களுடன் வினைபுரிகின்றன. பலேடியத்தைப் பயன்படுத்தி குறுக்குப் பிணைப்பு அல்லது இரண்டு கார்பன் அணுக்களால் அடுத்த சேர்மத்திற்கு உறுதியளிக்கப்படுகின்றன[3][4]

.

மேற்கோள்கள்

தொகு
  1. Baumgarten, P. (1924). "Über den Abbau des Pyridins zu Glutaconsäuredialdehyd und dessen Rückverwandlung in Pyridin (I.)". Ber. Dtsch. Chem. Ges. 57: 1622. doi:10.1002/cber.19240570876. 
  2. Becher, J. (1979). "Glutaconaldehyde Sodium Salt from Hydrolysis of Pyridinium-1-Sulfonate". Organic Syntheses 59: 79–84. 
  3. 3.0 3.1 Soullez, D.; Ple, G.; Duhamel, L. Duhamel P. (1995). "5-Bromopentadienal: A Versatile Intermediate for the Synthesis of Functionalized Polyenic Compounds". J. Chem. Soc., Chem. Commun.: 563–564. 
  4. Vicart, N.; Castet-Caillabet, D.; Ramondenc, Y.; Ple, G.; Duhamel, L. (1998). "Application of (2E,4E)-5-Bromo-2,4-Pentadienal in Palladium Catalysed Cross-Coupling: Easy Access to (2E,4E)-2,4-Dienals". Synlett: 411–412. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளுட்டாகானால்டிகைடு&oldid=2609212" இலிருந்து மீள்விக்கப்பட்டது