குளோரோகால்சைட்டு
அரிய பொட்டாசியம் கால்சியம் குளோரைடு உப்புப்படர் பாறை வகை கனிம
குளோரோகால்சைட்டு (Chlorocalcite) என்பது KCaCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அரிய பொட்டாசியம் கால்சியம் குளோரைடு உப்புப்படர் பாறை வகை கனிமமாகும். செயல்நிலை எரிமலைகளின் நீராவித்துளைகளில் இது காணப்படுகிறது.
குளோரோ கால்சைட்டு | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆலைடு கனிமம் |
வேதி வாய்பாடு | KCaCl3 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 185.54 கி/மோல் |
நிறம் | வெண்மை சாயல் உள்ள ஊதா |
படிக இயல்பு | பட்டகம் அல்லது அட்டவணை கனசதுரம் போன்ற படிகங்கள் |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
பிளப்பு | {001} இல் மிகச்சரியாக, {010} சரியாக {100} |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5-3 |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி ஊடுறுவும் அல்லது பகுதியாக ஒளி ஊடுறுவும். |
அடர்த்தி | 2.16 கணக்கிடப்பட்டது |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (–) |
ஒளிவிலகல் எண் | ~1.52 |
இரட்டை ஒளிவிலகல் | வலிமையற்றது |
கரைதிறன் | நீரில் கரையும் |
பிற சிறப்பியல்புகள் | ஈரமுறிஞ்சும் |
மேற்கோள்கள் | [1][2][3][4] |
முதன்முதலில் 1872 ஆம் ஆண்டு இத்தாலியிலுள்ள விசுவியசு மலையில் குளோரோகால்சைட்டு கண்டறியப்பட்டது. இக்கனிமத்தில் பொட்டாசியமும் கலந்துள்ளது என்பதைக் கண்டறிவதற்கு முன்னரே கால்சியம் கலந்துள்ளதைக் கண்டறிந்து பெயரிட்டதால் இப்பெயர் பெற்றது. செருமனி நாட்டின் லோவர் சாக்சோனி மாநிலத்தில் இருக்கும் பெயின் நகரில் உள்ள டெசுட்டமோனா சுரங்கத்திலும் குளோரோகால்சைட்டு கனிமம் கிடைக்கிறது.