குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்(I)

வேதிச் சேர்மம்

குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்(I) (Chloro(dimethyl sulfide)gold(I)) என்பது C2H6AuClS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் தங்கத்தின் ஓர் ஒருங்கிணைவுச் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்துடன் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் தங்கத்தின் வேதியியலில் பிரவேசிப்பதற்கான நுழைவுப் புள்ளியாகக் கருதப்படுகிறது.

குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்(I)
structural formula of the title molecule
ball-and-stick model of the molecule derived from the crystal structure
இனங்காட்டிகள்
29892-37-3 Y
ChemSpider 4809153 N
InChI
  • InChI=1S/C2H6S.Au.ClH/c1-3-2;;/h1-2H3;;1H/q;+1;/p-1 N
    Key: YQALRAGCVWJXGB-UHFFFAOYSA-M N
  • InChI=1/C2H6S.Au.ClH/c1-3-2;;/h1-2H3;;1H/q;+1;/p-1
    Key: YQALRAGCVWJXGB-REWHXWOFAH
யேமல் -3D படிமங்கள் Image

separate form
Image coordination form

பப்கெம் 6100873
  • [Au]Cl.CSC separate form
  • Cl[Au-][S+](C)C coordination form
பண்புகள்
C2H6AuClS
வாய்ப்பாட்டு எடை 294.55 g·mol−1
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கட்டமைப்பு

தொகு

மற்ற தங்கம்(I) அணைவுச் சேர்மங்களைப் போலவே குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்((I) சேர்மமும் மையத்தில் இடம்பெற்றுள்ள தங்க அணுவின் நோக்கில் கிட்டத்தட்ட நேர்கோட்டு வடிவ கட்டமைப்பை (176.9°) ஏற்கிறது. தங்கம்-கந்தகம் அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பு நீளம் மற்ற தங்கம்(I) அணைவுச் சேர்மங்களின் தங்கம்-கந்தகம் அணுக்களுக்கிடையேயான பிணைப்பைப் போலவே 2.271(2) Å என்ற நீளத்தைக் கொண்டுள்ளது. [1]

தயாரிப்பு

தொகு

தங்கத்தை இராச திராவகத்தில் கரைத்து முதலில் குளோரோ ஆரிக் அமிலம் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. இதைத் தொடர்ந்து இருமெத்தில் சல்பைடு சேர்த்து குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்((I) அணைவுச் சேர்மம் தயாரிக்கப்படுகிறது. [2] சோடியம் டெட்ராகுளோரோ ஆரேட்டை தங்கம்(III) அயனியின் மூலமாகப் பயன்படுத்தியும் குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்((I) தயாரிக்க முடியும். [3] இதே வழிமுறையில் புரோமோ ஒப்புமைச் சேர்மமும் (Me2SAuBr) தயாரிக்கப்படுகிறது. [4]

HAuCl4 + 2 SMe2 + H2O → Me2SAuCl + 3 HCl + OSMe2

என்ற வேதிச்சமன்பாடு இவ்வினைக்கான தோராயமான சமன்பாடாகும். 1:2 என்ற விகிதத்திலுள்ள இருமெத்தில் சல்பாக்சைடு / அடர் நைட்ரிக் அமிலக் கரைசலில் உள்ள தனிமநிலை தங்கத்தைப் பயன்படுத்தி எளிமையான முறையில் இச்சேர்மத்தை தயாரிக்கலாம். இவ்வினையில் இருமெத்தில் சல்பாக்சைடு ஓர் ஆக்சிசனேற்றியாகவும் வினையில் உருவாகும் Me2S ஓர் ஈந்தணைவியாகவும் செயல்படுகின்றன.[5]

வினைகள்

தொகு

குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்(I) அணைவுச் சேர்மத்திலுள்ள இருமெத்தில் சல்பைடு ஈந்தணைவியை பிற ஈந்தணைவிகள் எளிமையாக இடப்பெயர்ச்சி செய்கின்றன.

Me2SAuCl + L → LAuCl + Me2S (L = ஈந்தணைவி)

இருமெத்தில் சல்பைடு எளிதில் ஆவியாகும் என்பதால் இதை ஆவியாக்கி புதியதாக உருவாகும் தங்க அணைவுச் சேர்மத்தை எளிதில் தூய்மைப் படுத்தலாம்.

ஒளி, வெப்பம், காற்று போன்றவற்றில் குளோரோ(இருமெத்தில் சல்பைடு)தங்கம்(I) வெளிப்பட நேர்ந்தால் தனிமநிலை தங்கமாக சிதைவடையும். எனவே -20 பாகை செல்சியசு வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையில் கருப்பு நிற கண்ணாடி கொள்கலனில் இந்த அணைவுச் சேர்மத்தைச் சேமிப்பது பாதுகாப்பானதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. P. G. Jones and J. Lautner (1988). "Chloro(dimethyl sulfide)gold(I)". Acta Crystallogr. C 44 (12): 2089–2091. doi:10.1107/S0108270188009151. 
  2. Marie-Claude Brandys , Michael C. Jennings and Richard J. Puddephatt (2000). "Luminescent gold(I) macrocycles with diphosphine and 4,4-bipyridyl ligands". J. Chem. Soc., Dalton Trans. (24): 4601–4606. doi:10.1039/b005251p. 
  3. Nishina, Naoko; Yamamoto, Yoshinori (2007). "Gold-Catalyzed Intermolecular Hydroamination of Allenes: First Example of the Use of an Aliphatic Amine in Hydroamination". Synlett 2007 (11): 1767. doi:10.1055/s-2007-984501. 
  4. Hickey, James L.; Ruhayel, Rasha A.; Barnard, Peter J.; Baker, Murray V.; Berners-Price, Susan J.; Filipovska, Aleksandra (2008). "Mitochondria-Targeted Chemotherapeutics: The Rational Design of Gold(I)N-Heterocyclic Carbene Complexes That Are Selectively Toxic to Cancer Cells and Target Protein Selenols in Preference to Thiols". J. Am. Chem. Soc. 130 (38): 12570–1. doi:10.1021/ja804027j. பப்மெட்:18729360. 
  5. Mueller, Thomas E.; Green, Jennifer C.; Mingos, D. Michael P.; McPartlin, Jennifer C.; Whittingham, Conrad; Williams, David J.; Woodroffe, Thomas M. (1998). "Complexes of gold(I) and platinum(II) with polyaromatic phosphine ligands". J. Organomet. Chem. 551 (1-2): 313. doi:10.1016/S0022-328X(97)00522-6.