குளோர்டைமெபார்ம்
வேதிச் சேர்மம்
குளோர்டைமெபார்ம் (Chlordimeform) என்பது C10H13ClN2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு ஒட்டுண்ணி அல்லது சிற்றுண்ணிகளைக் கொல்லும் மென்னுண்ணிக் கொல்லியாகும். குறிப்பாக சிலந்திப்பேன் வகைப் பூச்சிகள், உண்ணிகளுக்கு எதிராகவும் சில செதிலிறக்கையின பூச்சிகளின் முட்டை மற்றும் தோலுரிப்பு இடை பருவத்தை எதிர்த்தும் செயல்படுகிறது. புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அனைத்துலக நிறுவனம் இதன் முக்கிய வளர்சிதை பொருளான 4-குளோரோ-ஆர்த்தோ-தொலுயிடின் சேர்மம் ஒரு புற்றுநோய் ஊக்கி என அறிவித்துள்ளது. எனவே இச்சேர்மத்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டு, பெரும்பாலான நாடுகளில் இதனை உற்பத்தி செய்வதற்கான பதிவு திரும்பப் பெறப்பட்டது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
என்&முதல்நிலை;-(4-குளோரோ-2-மெத்தில்பீனைல்)-என்,என்-டைமெத்தில்மெத்தேனிமடமைடு
| |
வேறு பெயர்கள்
குளோர்பீனமைடின்; குளோர்பெனமைடின்; பன்டால்; கேலக்ரான்
| |
இனங்காட்டிகள் | |
6164-98-3 | |
ChemSpider | 10468746 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C14746 |
பப்கெம் | 22544 |
| |
UNII | GXA8FP6Y9C |
பண்புகள் | |
C10H13ClN2 | |
வாய்ப்பாட்டு எடை | 196.68 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான படிகத் திண்மம் |
உருகுநிலை | 32 °C (90 °F; 305 K) (225-227 °செல்சியசு, ஐதரோகுளோரைடு) |
250 மி.கி/லி | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Chlordimeform, International Program on Chemical Safety, World Health Organization