குழந்தை ஃபலாக்கின் மரணம்
ஃபலாக் மரணம் (Death of Baby Falak) எனும் இரண்டு வயது சிறுமி , 18 ஜனவரி 2012 அன்று இந்தியாவின் புது தில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் பேரதிர்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டார், அவளது மண்டை உடைந்தும், உடலில் மனிதர் கடித்த அடையாளங்களுடன் அங்கு அவர் சேர்க்கப்பட்டார். அந்தக் குழந்தையை 15 வயது சிறுமி தனது தாய் என்று கூறி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். தனது குழந்தை படுக்கையில் இருந்து விழுந்ததாக மருத்துவரிடம் கூறினார். ஆனால் அந்தக் குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது மண்டை, கைகள் உடைந்து இருந்தது, மனிதர் கடித்த தடங்கள் உடம்பில் இருந்தது மற்றும் சூடான இரும்பினால் கன்னத்தில் வைக்கப்பட்ட அடையாளங்கள் இருந்தன. [1] குழந்தை நிபுணர்கள் இது மிகவும் கொடூரமான அனுபவமாக இருந்ததாகவும் இதற்கு முன்னர் இது போன்று அவர்கள் பார்த்ததில்லை என்றும் கூறினர். [2] குழந்தை பலக் 15 மார்ச் 2012 அன்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். மூன்று மாதங்களில் அந்தக் குழந்தைக்கு மாரடைப்பு ஏற்படுவது மூன்றாவது முறை. [3] அவர் ஒழுங்கற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டிருந்தாலும், முழுமையாக குணமடைவாள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குடும்பம்
தொகுஆரம்பத்தில் ஃபலாக் பிறப்பு மற்றும் குடும்பம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. உண்மையில், ஃபலக் என்ற பெயரும் அவளுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செவிலியர்களால் வழங்கப்பட்டது. ஃபலாக் தனது தாய் என்று கூறி 15 வயது குழந்தையால் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர், அவரது உயிரியல் தாயை காவல் துறையினர் தேடினர். பிப்ரவரி 1, 2012 அன்று, அவர்கள் அவரது தாயார் முன்னியை கண்டுபிடித்ததாகக் கூறினர். [4] அவளுக்கு இரண்டு உடன்பிறப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் மாந்தக் கடத்தல்காரர்களின் விளைவாக இருவரிடமிருந்தும் அவளுடைய தாயிடமிருந்தும் பிரிக்கப்பட்டது. தெரிய வந்தது.
மருத்துவமனை
தொகுஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக பேரதிர்ச்சி மையத்தில் அந்தக் குழந்தை அனுமதிக்கப்பட்டார், அதன் மண்டை உடைந்தும், உடலில் மனிதர் கடித்த அடையாளங்களுடன் அங்கு அவர் சேர்க்கப்பட்டார். அந்தக் குழந்தையை 15 வயது சிறுமி தனது தாய் என்று கூறி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். தனது குழந்தை படுக்கையில் இருந்து விழுந்ததாக மருத்துவரிடம் கூறினார்.ஆனால் காயங்களின் தன்மை வழங்கப்பட்ட விளக்கத்துடன் பொருந்தவில்லை. சிகிச்சையின் போது, அவளுக்கு மூளையுறை அழற்சி ஏற்பட்டது மற்றும் இரண்டு முறை மாரடைப்புகளும் ஏற்பட்டது. அந்தக் குழந்தைக்கு ஆறு முறை மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றது. [5] அந்தக் குழந்தை ஒரு மாதத்திற்கும் மேலாக மூச்சியக்கியில் வைக்கப்பட்டு இருந்தாள், அவளுக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை இருந்தது, மற்றும் கடுமையான நுரையீரல், இரத்தம் மற்றும் மூளை நோய்த்தொற்றுகளால் அவதிப்பட்டாள். குழந்தையை மூச்சியக்கியில் இருந்து வெளியேற்றி மார்ச் 2 அன்று அறைக்கு மாற்றினார்கள். [6] குழந்தை குணமடைவதற்கான அறுகுறிகள் தென்பட்டது. மருத்துவர்கள் அந்தக் குழந்தையினை"அதிசய குழந்தை" என்று அழைத்தனர். [7] அவரைக் கவனித்த செவிலியர்கள் அந்தக் குழந்தையால் மூச்சுவிடவும் கண்களைத் திறக்கவும் முடிந்தது என்றும், கைகால்களில் அசைவு இருப்பதாகவும் கூறினார். அனைத்து செவிலயர்களும் குழந்தையுடன் குழந்தையுடன் மிகவும் இணைந்திருந்தோம், இப்போது அவள் இல்லை. என்பது மனச்சோர்வை ஏற்படுத்துகிறது, "என்று செவிலியர் ஒருவர் கூறினார். ஃபலக்கின் அவலநிலையால், பல இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்கள் அவர் குணமடைந்த பிறகு தத்தெடுக்க முன்வந்தனர். [8]
சான்றுகள்
தொகு- ↑ "Abandoned, 2-yr-old battles for life in ICU". Hindustan Times. 25 January 2012 இம் மூலத்தில் இருந்து 16 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120316110629/http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Abandoned-2-yr-old-battles-for-life-in-ICU/Article1-802284.aspx. பார்த்த நாள்: 16 March 2012.
- ↑ "have never seen a case like this, say doctor treating baby abused relentlessly". NDTV. 28 January 2012.
- ↑ "Baby Falak dies of cardiac arrest in AIIMS Trauma Centre". IBN Live. 15 March 2012 இம் மூலத்தில் இருந்து 18 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120318053557/http://ibnlive.in.com/news/baby-falak-dies-of-cardiac-arrest/239573-3.html. பார்த்த நாள்: 16 March 2012.
- ↑ "baby Baby Falak's 'mother' traced?". 1 February 2012. http://zeenews.india.com/news/nation/baby-falak-s-mother-traced_756057.html.
- ↑ "baby Falak Age 2, dies of heart attack in hospital". NDTV. 15 March 2012 இம் மூலத்தில் இருந்து 16 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120316100055/http://www.ndtv.com/article/india/baby-falak-age-2-dies-of-heart-attack-in-hospital-186496. பார்த்த நாள்: 16 March 2012.
- ↑ "Two-year-old battered baby Falak dies in AIIMS". Hindustan Times. 15 March 2012 இம் மூலத்தில் இருந்து 16 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120316062724/http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Two-year-old-battered-baby-Falak-dies-in-AIIMS/Article1-826027.aspx. பார்த்த நாள்: 16 March 2012.
- ↑ "Battered Indian girl Baby Falak dies in hospital". 16 March 2012. https://www.bbc.co.uk/news/world-asia-india-17395459. பார்த்த நாள்: 17 March 2012.
- ↑ "Two-year-old Falak leaves for a better world". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 March 2012 இம் மூலத்தில் இருந்து 27 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130527203401/http://articles.timesofindia.indiatimes.com/2012-03-16/delhi/31197665_1_life-saving-surgeries-baby-falak-munni. பார்த்த நாள்: 16 March 2012.