குழாய் நீர்
குழாய் நீர் என்பது குழாய்களின் வழியாக அளிக்கப்படும் நீரினைக் குறிக்கும். இவ்வகை நீரானது குடிக்க குடிநீராகவும், சமையலுக்கும், கழுவுதலுக்கும், கழிவறைகளைச் சுத்தம் செய்யவும் பயன்படுத்தப்படலாம். கட்டிடத்தினுள் குழாய் அமைப்புகளினால் நீர் பெறப்படலாம். ஆயினும் இம்முறை 19ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை வெகுசிலருக்கே கிடைத்தது. ஆயினும் பின்னாட்களில் இந்த நிலை மாறி, தற்காலத்தில் வளர்ந்த நாடுகளில் எல்லாருக்கும் இவ்வகையில் நீர் கிடைக்கின்றது. வளர்ந்துவரும் நாடுகளில் ஏழைகளுக்கு இவ்வகை நீர் கிடைப்பது இன்றும் அரிதாகும்.
குழாய் நீர் பொதுவாகக் குடிநீராகவே கருதப்படுகின்றது. ஆயினும் சிலமுறை நீர்த் தரம் குறித்த சிக்கல்கள் எழுந்துள்ளன. ஆதலால் வீடுகளில் நீரினைத் தூய்மையாக்க வடிகட்டியோ, கொதிக்கவைத்தோ, வடித்திறக்கல் முறையினையோ பயன்படுத்தலாம்.
குழாய் நீரானது தூய்மைசெய்த பின்னரே குழாய்களில் செலுத்தப்படுவதால் அவை கிணற்று நீரிலிருந்தும், கை அடி (hand pumps) நீரிலிருந்தும் வேறுபட்டதாகும். இவ்வகை நீரில் தூய்மைநிலை மாறுபடலாம்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Plumbing: the Arteries of Civilization, Modern Marvels video series, The History Channel, AAE-42223, A&E Television, 1996