குழிநரி (antlions) என்பது ஒரு பூச்சி ஆகும். இதில் 2,000 இனங்கள் உள்ளன. இது Myrmeleontidae என்றக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் குடம்பிகள் அவற்றின் சுறுசுறுப்பான வேட்டை சுபாவத்துக்காக அறியப்படுகிறன. இவற்றில் பல இனங்கள், தனியாக வாழும் இரைகொல்லிப் பூச்சிகள் ஆகும். இவை எறும்பு போன்று ஊர்ந்துவரும் உயிரினங்களைப் பிடித்து உண்ணும். இவை தன் இரையைப் பிடிப்பதற்காக தோட்டங்கள், திறந்தவெளிப் பகுதிகளில், குறிப்பாக மணல் பகுதிகளில் கூம்புவடிவத்தில் சரிவான குழிகளை உருவாக்குகிறன. இந்தக் குழியின் எந்தப் பாகத்தில் ஒரு பூச்சி கால் வைத்தாலும், அவை குழியின் மையப் பகுதிக்குள் விழுந்து குழிநரிக்கு உணவாகிவிடும். இவற்றில் வயது வந்த பூச்சிகள் குறைவாகவே அறியப்படுகின்றன. அவை பெரும்பாலும் அந்தியில் அல்லது இருண்ட பிறகு பறக்கின்றன. மேலும் வளர்ந்த இந்தப் பூச்சிகள் தட்டாரப்பூச்சி அல்லது ஊசித்தட்டான் என தவறாக அடையாளம்காண வாய்ப்புள்ளது. அவை சில நேரங்களில் ஆன்ட்லியன் லசிவிங்ஸ் ( antlion lacewings) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. மேலும் இதன் குடம்பிகள் மணலில் விசித்திரமான பொறியமைப்பை உருவாக்குவதால் அமெரிக்காவில் சிலசமயம் இதன் குடம்பிகளை டோட்லிபக் (doodlebugs) என அழைக்கப்படுகின்றன.

குழிநரி
Antlions
புதைப்படிவ காலம்:251–0 Ma
Mesozoic – Recent
வயதுக்குவந்த குழிநரி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
உயிரிக்கிளை:
கணுக்காலி
வகுப்பு:
பூச்சி
வரிசை:
Superfamily:
குடும்பம்:
மிர்மெலியோன்டிடாய்

Latreille, 1802
Subfamilies

Acanthaclisinae
Brachynemurinae
Dendroleontinae
Dimarinae
Echthromyrmicinae
Glenurinae
Myrmecaelurinae
Myrmeleontinae
Nemoleontinae
Palparinae
Pseudimarinae
Stilbopteryginae

வேறு பெயர்கள்

Myrmeleonidae (lapsus)
Palaeoleontidae
and see text

குழிநரிகள் உலகம் முழுக்க பரவியுள்ளன. பெரும்பாலும் அவற்றின் குடம்பிகள் (லார்வா) பொதுவாக வறண்ட மற்றும் மணற்பாங்கான பகுதிகளில் குழிபறித்து பதுங்கி உணவை வேட்டையாடக்கூடியன. ஆனால் சில குடம்பிகள் குப்பைகள் அல்லது இலைகளுக்கு இடையில் பதுங்கியபடி தங்கள் இரையை வேட்டையாடுகின்றன.

சொற்பிறப்பு

தொகு

தமிழில் இதை குழிநரி என அழைக்கின்றனர். காரணம் நரியைப் போல புத்திசாலித்தனமாக இரையைப் பிடிப்பதால் இப்பெயர் பெயர் வந்திருக்கலாம்.[1] ஆங்கிலத்தில் "ஆன்ட்லயன்" (சிங்க எறும்பு) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பூச்சிகளில் பெரிய சதவிகிதத்தைக் கொண்ட எறும்புகளை, சிங்கம் போல அழிப்பது அல்லது வேட்டையாடுவதைக் கொண்டு இவ்வாறு குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது.[2]

குழிநரியின் வளர்ச்சி நிலைகள்

தொகு
 
குழிநரியின் வளர்ச்சி நிலைகள்

இதன் வளர்ச்சி நிலையானது பெண் குழிநரி பொருத்தமான இடத்தில் முட்டை இடுவதில் இருந்து தொடங்குகிறது. குழிநரியின் குடம்பியானது அது எங்கு வெளியாகிறதோ அதைப்பொறுத்து, இலைகள், குப்பைகள் மரத் துண்டுகள் ஆகியவற்றின் கீழ் தன்னை மறைத்துக் கொள்கிறது. தளர்வான மண் அமைப்பு என்றால் சரிவான குழியைப் பறித்து மறைந்து கொள்கிறது. [6] பதுங்கி இருந்து தனக்கான உணவை வேட்டையாடுகின்றது. நேரடியாக இரையைத் தாக்குவது ஆபத்தானது என்பதால் இது பொறிகளை உருவாக்கி அதை பராமரிக்கிறது. இதனால் போதுமான உணவு கிடைக்கவில்லை என்றால் குறைந்த வளர்சிதை மாற்ற விகிதங்களைக் கொண்டிருக்கும், இதனால் உணவு இல்லாமல் இவற்றால் நீண்ட காலம் வாழ முடியும்.[3] இவை தங்கள் வாழ்நாள் சுழற்சியை முடிக்க பல ஆண்டுகள் ஆகலாம்; அவை அதிகமான உணவைப் பெற்றால் அதிக அளவில் முதிர்ச்சி அடையும், இதனால் பல மாதங்கள் உணவளிக்காமல் தப்பிப்பிழைக்கவும் முடியும்.[4][5] குளிர்காலத்தில் அவை ஆழமான இடத்திற்குச் சென்று அங்கு செயலற்ற நிலையில் இருக்கும்.[6]

குடம்பி அதன் அதிகபட்ச அளவு வளர்ச்சி நிலையை அடையும் போது, ​​அது கூட்டுப்புழு நிலையை அடைந்து உருமாற்றம் அடைய தயாராகிறது.[5] இவை மணல் அல்லது எதாவது ஒரு இடத்தில் பட்டுநூல் போன்ற இழையை வெளியுமிழ்ந்து தன்னைச்சுற்றி ஒரு கூடு கட்டிக்கொள்ளுகின்றது. இந்தக் கூட்டோடு இவை மணலில் பல செண்டி மீட்டர் ஆழத்துக்கு புதைத்துக் கொள்ளலாம். சுமார் ஒரு மாத காலகட்டத்தில் வயதுவந்த பூச்சியாக உருமாற்றம் அடைந்து தன் கூட்டைப் பிளந்து மேற்பரப்புக்கு வருகிறது. மேலே வந்த சுமார் இருபது நிமிடங்களுக்குப் பிறகு, குழிநரிக்கு இறக்கைகள் முழுமையாக திறக்கப்படுகின்றது, பின் தனக்கான ஒரு துணையைத் தேடிச் செல்கிறது.

படவரிசை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ஆதி வள்ளியப்பன் (2017 அக்டொபர் 14). "பூச்சிகளைப் பிடிக்கும் புதைகுழி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  2.   ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Pocock, Reginald Innes (1911). "Ant-lion". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 2. Cambridge University Press. 
  3. Jervis, Mark A. (2007). Insects as Natural Enemies: A Practical Perspective. Springer Science & Business Media. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-6587-3.
  4. New, T. (1991). Insects as Predators. NSW University Press. p. 69.
  5. 5.0 5.1 Swanson, Mark (2012). "Reproductive Behavior". The Antlion Pit. பார்க்கப்பட்ட நாள் 23 February 2016.
  6. Swanson, Mark (2012). "Metamorphosis". The Antlion Pit. பார்க்கப்பட்ட நாள் 23 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழிநரி&oldid=2761561" இலிருந்து மீள்விக்கப்பட்டது