குவாங் சியூகின்

சீனாவின் சுதந்திரப் பத்திரிக்கையாளார்

குவாங் சியூகின்( Huang Xueqin) (பிறப்பு 1988) ஒரு மி டூ இயக்க ( #MeToo ) ஆர்வலரும்,[1] பெண் கள் உரிமை ஆர்வலரும், சீனாவின் சுதந்திர பத்திரிகையாளரும் ஆவார். ஒரு பத்திரிகையாளராக பணியாற்றுவதற்கு முன்பு, குவாங் சீனாவின் குவாங்டொங் மாகாணத்திலுள்ள குவாங்சௌவிலுள்ள பல செய்தித்தாள்களில் புலனாய்வு பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.[2] செப்டம்பர் 2021 இல், இவரும் மற்றொரு ஆர்வலரான வாங் ஜியான்பிங்கும் காணாமல் போனார்கள். அரச அதிகாரத்தை சீர்குலைத்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டதாக நம்பப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளை பெண் ஊடகவியலாளர்களுக்கு வழங்கும் விருதைப் பெற்றார். அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளருக்கு இது வழங்கப்பட்டது.[3] =

தொழில்

தொகு

சீனப் பெண் பத்திரிகையாளர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் அறிக்கை

தொகு

அக்டோபர் 2017 இல், குவாங் சீனப் பெண் பத்திரிகையாளர்களின் பாலியல் துன்புறுத்தல் பற்றிய அனுபவத்தின் மீது ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கி 416 பதில்களைச் சேகரித்தார்.[4] மார்ச் 7, 2018 அன்று, இந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில், அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கையின்படி, 80% க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவத்தைக் கொண்டுள்ளனர். கணக்கெடுப்பில் பங்கேற்ற பெண் பத்திரிகையாளர்களில் 42.2% பேர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர்.[5]

சீனாவில் #MeToo

தொகு

பெய்ஹாங் பல்கலைக்கழக சம்பவம்

தொகு

அக்டோபர் 2017 இல், பெய்ஹாங் பல்கலைக்கழக முனைவரான லூ சிசி, தனது முன்னாள் ஆராய்ச்சி ஆலோசகர் சென் சியாவு என்பவர் மீது பாலியல் புகார். தெரிவித்தார். அவர் தனது மாணவர்களை பல ஆண்டுகளாக துன்புறுத்தி வந்தார். இருப்பினும், இவரது அறிக்கைக்கு பல்கலைக்கழகம் பதிலளிக்கவில்லை. இதற்கிடையில், பாலியல் துன்புறுத்தல் குறித்த சீனப் பெண் பத்திரிகையாளர்களின் அனுபவம் குறித்த குவாங்கின் கணக்கெடுப்பைக் கண்டு, அவரது உதவியை நாடினார். இவர்கள் "ஹார்ட் கேண்டி" என்ற கூட்டணியை உருவாக்கி, ஜனவரி 1, 2018 அன்று வெய்போவில் சென் சியாவோவின் நடத்தைகளை அம்பலப்படுத்தினர். இது ஒரு நாளில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. இதற்குப் பதிலடியாக, பல்கலைக்கழகம் சென் சியாவோவின் கற்பித்தல் நற்சான்றிதழ்களை ரத்து செய்தது, கல்வி அமைச்சகம் அவரது "சாங்ஜியாங் அறிஞர்" பட்டத்தை ரத்து செய்தது. இது சீனாவின் மி டூ இயக்கத்தின் தொடக்கத்தைக் குறித்தது.[6]

அதைத் தொடர்ந்து, குவாங், பல மி டூ இயக்கத்திற்கு ஆதரவாக பல பிரச்சாரங்களைத் தொடங்கினார்.

2019 இல் கைது

தொகு

ஜூன் 9, 2019 அன்று, குவாங் 2019 ஆங்காங் ஒப்படைப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று, மேட்டர்ஸ் தளத்தில் தனது அனுபவத்தைப் பற்றி எழுதினார்.[7] ஜூன் 11 அன்று, இவர் தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டு, ஆங்காங் போராட்டக்காரர்களைப் பற்றி கட்டுரை எழுதியதற்காக குவாங்சோ காவல்துறை தன்னை துன்புறுத்தியதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து, 2019 அக்டோபரில், குவாங்சோ காவலர்கள் இவரை கைது செய்தனர்.[8] ஜனவரி 17, 2020 அன்று, பிணையில் விடுவிக்கப்பட்டார்.[9]

2021ல் மீண்டும் கைது

தொகு

செப்டம்பர் 19, 2021 அன்று, குவாங் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் வழக்கறிஞர் வாங் ஜியான்பிங் காணாமல் போயினர். இவர்கள் இருவரும் அரச அதிகாரத்தைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒருவர் கூறியதாக ஒரு மனித உரிமை அமைப்பு கூறியது. நவம்பர் 2021 இல், குவாங்சோ பொது பாதுகாப்பு பணியகத்தால் வழங்கப்பட்ட கைது அறிவிப்புகள் இதை உறுதி செய்தது. அரச அதிகாரத்தை சீர்குலைக்கத் தூண்டியதாக சந்தேகத்தின் பேரில் குவாங்சோ பொது பாதுகாப்பு பணியகத்தால் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இப்போது குவாங்சோவில் உள்ள எண் 1 தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.[10][11][12]

சான்றுகள்

தொகு
  1. "China Holds #MeToo Activist Who Wrote About Hong Kong Protests". https://www.nytimes.com/2019/10/24/world/asia/china-metoo-hong-kong-protests.html. 
  2. "曾報道反送中遊行 屢揭性侵醜聞 內地獨立記者黃雪琴疑被刑拘" இம் மூலத்தில் இருந்து 2019-10-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191026101728/https://www.hkcnews.com/article/24412/%25E9%25BB%2583%25E9%259B%25AA%25E7%2590%25B4-6%25E6%259C%25889%25E6%2597%25A5%25E5%258F%258D%25E9%2580%2581%25E4%25B8%25AD%25E5%25A4%25A7%25E9%2581%258A%25E8%25A1%258C-%25E7%25B6%25AD%25E6%25AC%258A%25E4%25BA%25BA%25E5%25A3%25AB-24412/%E9%BB%83%E9%9B%AA%E7%90%B4. 
  3. "IWMF Announces 2022 Courage in Journalism Award Winners". https://www.prnewswire.com/news-releases/iwmf-announces-2022-courage-in-journalism-award-winners-301575265.html. 
  4. "这份调查报告说:超过八成的中国女记者曾经受过性骚扰_文化_好奇心日报". www.qdaily.com. Archived from the original on 2020-01-05. பார்க்கப்பட்ட நாள் 2020-05-30.
  5. "发声本身就是一种力量:专访《中国女记者性骚扰调查》发起者黄雪琴". baijiahao.baidu.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-30.
  6. Martina, Michael; Shepherd, Christian (2018-01-14). "China revokes academic title of professor accused of sexual harassment". Reuters. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
  7. "〈記錄我的「反送中」大遊行〉". Archived from the original on 2020-01-05. பார்க்கப்பட்ட நாள் 2020-01-18.
  8. 女权人士、媒体人黄雪琴遭广州公安拘留
  9. 弗林 (18 January 2020). "曾报道香港反送中 大陆女权媒体人黄雪琴被拘3月后获释". RFI. பார்க்கப்பட்ட நாள் 2020-05-16.
  10. "原定 20 日赴英留學 內地獨立記者黃雪琴與送行者維權人士王建兵雙雙失聯". September 21, 2021. Archived from the original on செப்டம்பர் 21, 2021. பார்க்கப்பட்ட நாள் September 21, 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "中国独立记者黄雪琴、职业病权益倡导者王建兵失联". September 21, 2021. பார்க்கப்பட்ட நாள் September 21, 2021.
  12. "公益人王建兵、獨立記者黃雪琴被捕". November 6, 2021. பார்க்கப்பட்ட நாள் November 22, 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாங்_சியூகின்&oldid=3929124" இலிருந்து மீள்விக்கப்பட்டது