குவாய் சிங் மாவட்டம்
குவாய் சிங் மாவட்டம் (Kwai Tsing District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இது குவாய் சுங் மற்றும் சிங் யீ தீவு ஆகிய இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். அத்துடன் "குவாய் சிங் மாவட்டம்" புதிய கட்டுப்பாட்டகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒன்றும் ஆகும். இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 2006 ஆம் ஆண்டு கணிப்பின் படி 523,300 ஆகும். இம்மாவட்டத்தின் மக்கள் ஹொங்கொங்கின் மூன்றாவது குறைந்த அளவிலான கல்வியறிவையும் சராசரிக்கும் குறைவான வருமானத்தை ஈட்டுவோராகவும் உள்ளனர். அத்துடன் இம்மாவட்டத்தில் கிட்டத்தட்ட 75% வீதமானோர் பொது வீட்டுத்தொகுதிகளிலேயே வசிக்கின்றனர்.
குவாய் சிங் மாவட்டம்
Kwai Tsing District | |
---|---|
வரைப்படத்தில் மாவட்டம் | |
அரசு | |
• மாவட்ட பணிப்பாளர் | (Mr. TANG Kwok-kong, MH, JP) |
பரப்பளவு | |
• மொத்தம் | 21.82 km2 (8.42 sq mi) |
• நிலம் | 12 km2 (5 sq mi) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 5,23,300 |
நேர வலயம் | ஒசநே+8 (Hong Kong Time) |
இணையதளம் | குவாய் சிங் மாவட்டம் |
எல்லைகள்
தொகுஇந்த குவாய் சிங் மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கு மற்றும் மேற்கில் சுன் வான் மாவட்டமும், கிழக்கில் சா டின் மாவட்டமும், தென்கிழக்காக சம் சுயி போ மாவட்டம் மற்றும் யவ் சிம் மொங் மாவட்டம் இரண்டினதும் கடல் பரப்பையும், தெற்காக மையம் மற்றும் மேற்கு மாவட்டத்தின் கடல் பரப்பையும் கொண்டுள்ளது.
வரலாறு
தொகுகுவாய் சிங் என ஒரு மாவட்டம் 1980 க்கு முதல் மாவட்ட சபைகள் உருவாக்கும் வரை இருக்கவில்லை. 1985 வரை இப்பகுதி சுன் வான் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. 1985 ஆம் ஆண்டு "குவாய் சுங் மற்றும் சிங் யீ மாவட்டம்" என பெயரிடப்பட்டது. 1988 வரை இருந்த இப்பெயர் சுருக்கப்பட்டு "குவாய் சிங் மாவட்டம்" என தற்போது அழைக்கப்படுகின்றது.
கொள்கலன் துறைமுகங்கள்
தொகுபன்னாட்டளவில் பிரசித்திப்பெற்ற கொள்கலன் துறைமுகங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன. அவை "குவாய் சுங் மற்றும் "சிங் யீ தீவு" இரண்டுக்கும் இடையிலான றெம்பிளர் கால்வாய் ஊடான கரையோரப் பகுதிகளில் உள்ளன.
அத்துடன் பன்னாட்டு விமான நிலையம் செல்வதற்கான லந்தாவு வடக்கு அதிவிரைவு பாதையும் ஹொங்கொங்கிலேயே மிகப்பெரியதும் நீளமானதும் பாலமான சிங் மா பாலம் இம்மாவட்டத்தில் உள்ளன.
நகர மையங்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- Kwai Tsing District Council பரணிடப்பட்டது 2003-08-08 at the வந்தவழி இயந்திரம்
- Kwai Tsing District Council பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- Kwai Tsing District Council website பரணிடப்பட்டது 2010-07-23 at the வந்தவழி இயந்திரம்
- Tsuen Wan New Town பரணிடப்பட்டது 2004-11-12 at the வந்தவழி இயந்திரம்
- List and map of electoral constituencies (large PDF file) பரணிடப்பட்டது 2007-02-25 at the வந்தவழி இயந்திரம்